தரைப்பாலத்தில் கிடந்த தலையில்லாத முண்டம்... காணாமல் போன இளைஞர் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்...!
மதுரையில் 17 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே இளைஞரை கொலை செய்து தரைப்பாலத்தில் வீசி சென்றதால் பரபரப்பு - காணாமல் போன நபர் 17 நாட்களுக்கு பிறகு உடல் அழுகிய நிலையில் தலையின்றி மீட்பு . தலையை மீட்டு தரக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் -லட்சுமி என்பவரது மகன் மணிகண்டன் 30 இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இவர் ஆவியூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 07 ஆம் தேதி மணிகண்டன் காணாமல் போனதாக அவரது தாய் லட்சுமி ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து காவல்துறையினர் மணிகண்டனை தேடி வந்தனர்.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி மனைவி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலமான காதல் லீலைகள்...!
இந்த நிலையில் ஆவியூர் காவல் நிலையத்தில் பாரதிராஜா (27) மற்றும் விக்னேஷ் (24) என்ற இரண்டு நபர்கள் ஆஜராகி தாங்கள் தேடி வரும் மணிகண்டன் என்ற நபரை கொலை செய்து கள்ளிக்குடி அருகே உள்ள T.கொக்குளம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் அருகே வீசி சென்றதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடத்தில் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவியூர் மற்றும் கூடக்கோவில் காவல் துறையினர் காணாமல் போன மணிகண்டனின் உடலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்டனர்.
ஆனால் காணாமல் போன மணிகண்டனின் தலையின்றி உடல் மட்டும் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார்கள் சம்பவ இடத்தில் தலையை கண்டுபிடித்து தராமல் உடலை வாங்க முடியாது எனக்கூறி கூடக்கோவில் கொக்குளம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தற்போது ஆவியூர் மற்றும் கூட கோவில் போலீசார் கொலை செய்யப்பட்டவரின் தலையை தேடும்பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உண்டியலுக்கும் பாதுகாப்பு இல்ல... உயிருக்கும் பாதுகாப்பு இல்ல... முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்..!