காதல், கசமுசா ஓகே!! திருமணம் நோ!! ஏமாற்ற நினைத்த காதலன்!! பிறப்புருப்பை அறுத்த காதலி!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பை: மும்பை சாந்தாகுரூஸ் கிழக்கு பகுதியில் உள்ள கலினா ஜம்லிபாடா என்ற இடத்தில் புத்தாண்டு தினத்தன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 42 வயது ஆணும் 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று காதலனை வலியுறுத்தி வந்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த ஆண் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனை அழைத்தார். அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்கு சென்றார். இருவரும் தனியாக இருந்தபோது மீண்டும் திருமணம் குறித்த பேச்சு எழுந்தது. அப்போதும் ஆண் மறுத்துவிடவே, ஆத்திரமடைந்த பெண் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் மர்ம உறுப்பை துண்டித்தார்.
படுகாயமடைந்த ஆண் வலியால் துடித்தபோதும், பெண்ணிடமிருந்து தப்பி ஓடி தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்தார். சகோதரர் உடனடியாக விரைந்து வந்து அவரை மீட்டு சாந்தாகுரூஸில் உள்ள வி.என். தேசாய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் போங்காட்டம்... திமுக அரசை விளாசிய நயினார்...!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மும்பை போலீசார் உடனடியாக வழக்கு பதிந்தனர். குற்றம்சாட்டப்பட்ட 25 வயது பெண்ணை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஆபத்தான ஆயுதத்தால் காயம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்படும் மனவேறுபாடுகள் இத்தகைய வன்முறைக்கு வழிவகுக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எந்த கட்சியிலயும் இப்படி நடக்காது!! தமிழ்க காங்கிரஸ் அழிவின் பாதையில் போகிறது! ஜோதிமணி உருக்கம்!