×
 

காதலியை கொன்று துண்டு துண்டாக்கி பிரிட்ஜில் அடைத்த கொடூரம்!! கடற்படை அதிகாரி குரூரம்!

ஏற்கனவே திருமணமான இவர், 'டேட்டிங் ஆப்' மூலம் அறிமுகமான மவுனிகா, 29, என்ற பெண்ணுடன் பழகி வந்தார்.

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். தேகா முகாமில் அதிகாரியாகப் பணியாற்றும் சிந்தடா ரவீந்திரா (35) என்ற நபர், தனது காதலியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை பிரிஜ்ஜில் பதுக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்திரா ஏற்கனவே திருமணமானவர். 'டேட்டிங் ஆப்' மூலம் அறிமுகமான மவுனிகா (29) என்ற பெண்ணுடன் அவர் நெருங்கிப் பழகி வந்தார். சமீபத்தில் ரவீந்திராவின் மனைவி, விஜயநகரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ரவீந்திரா நேற்று முன்தினம் மவுனிகாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரவீந்திரா, மவுனிகாவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர், அவரது தலை உள்ளிட்ட உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். சில உடல் பாகங்களை சாக்கு பையில் கட்டி வெளியே எடுத்துச் சென்று வீசியதாகவும், மீதமுள்ள பாகங்களை வீட்டில் உள்ள பிரிஜ்ஜில் பதுக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பாஜகவின் "முரட்டு அடிமை" EPS..! தி.மலையில் எ. வ. வேலுவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!

கொலை செய்துவிட்டதாக ரவீந்திரா தானாகவே போலீசில் சரணடைந்தார். உடனடியாகச் செயல்பட்ட போலீசார், ரவீந்திராவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பிரிஜ்ஜில் மவுனிகாவின் உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசில் ரவீந்திரா அளித்த வாக்குமூலத்தில், மவுனிகா தன்னிடம் 3.5 லட்சம் ரூபாய் பறித்ததாகவும், இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து தனது மனைவியிடம் கூறி விடுவதாக மிரட்டியதாலும் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் விசாகப்பட்டினம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படை அதிகாரி என்ற பொறுப்புள்ள பதவியில் இருந்த ஒருவர் இத்தகைய கொடூரமான செயலைச் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போலீசார் முழு விவரங்களையும் விசாரித்து வருகின்றனர். உடல் பாகங்கள் அனைத்தையும் சேகரித்து, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொலை சம்பவம் சமூக ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சினைகள் மற்றும் உறவுகளின் போக்கு குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கின் முழு உண்மையும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: திருப்பூரில் 6 பேருடன் தொடர்பு..!! லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதியை தட்டித்தூக்கிய டெல்லி போலீஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share