×
 

சபரிமலையை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலில் தங்கம் மாயம்! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி! உளவுத்துறை பகீர் அறிக்கை!

புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் பாதுகாப்பில் குளறுபடி காரணமாக, பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கக் கட்டிகள் திருடு போனதாக டிஜிபி அறிக்கையில் வெளியாகி உள்ளது.

புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் திருடு போனதாக கேரள டிஜிபி அறிக்கை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்த பிரசித்தி பெற்ற கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல குறைபாடுகள் இருப்பதாக டிஜிபி ராவதா ஏ. சந்திரசேகர் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் கோவிலுக்கு வழங்கப்பட்ட சுமார் 78 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 

மேலும், பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்ட பல அடுக்கு தங்க விளக்குகள் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இன்றி மாற்றப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழையும் கோவில் ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அரச குடும்பத்தினரின் கூட்டாளிகள் உள்ளிட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் அனுமதிக்கப்படுவதும் பாதுகாப்புக் குறைபாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதிப்புமிக்க தங்கம், வெள்ளி பொருட்களை பாதுகாப்பான அறைக்குள் மாற்ற வேண்டும் எனவும் டிஜிபி அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

இதையும் படிங்க: சீன வான்வழியில் பறந்த விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு!! பயணிகள் திக்!! திக்!! 8 மணி நேர தாமதம்!!

இந்த அறிக்கை வெளியானது கேரள அரசியல் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்கனவே தங்க திருட்டு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பத்மநாபசுவாமி கோவிலிலும் இத்தகைய புகார் எழுந்திருப்பது கோவில் நிர்வாகத்தின் மீது கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

எனினும், கோவில் நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. “வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோவிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. கோவிலில் உள்ள அனைத்து விலை உயர்ந்த பொருட்களும் மிகுந்த பாதுகாப்புடன் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன” என கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கைக்குரிய இடங்களில் இத்தகைய குளறுபடிகள் ஏற்படுவது வருத்தமளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

கோவில் நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் இந்த விவகாரம் முழுமையாக விசாரிக்கப்பட்டு உண்மை வெளியாக வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சம்பவம் கோவில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் தேவையான சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

இதையும் படிங்க: உலக பட்டினி தினம்..! முதல்வர் விஜய் போட்ட ஆணை... காரைக்குடியில் அமைச்சர் பிரபு அன்னதானம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share