×
 

கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

பந்தநல்லூர் அருகே  விளத்தொட்டி கிராமத்தில் வீட்டிற்குள் இருந்த அரசு பள்ளி ஆசிரிய  தாக்கியதுடன் கத்தி முனையில் எட்டு சவரன் நகைகள் கொள்ளை.  முகமூடி திருடர்கள் அட்டூழியம்.

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அடுத்த விளத்தொட்டி கிராமத்தில் பந்தநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் செந்தமிழ் செல்வி (54)என்பவர் தன் மகனுடன் குடியிருந்து வருகிறார்.  இவரின் கணவர் கமலக்கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், நேற்று இரவு ஆசிரியை செந்தமிழ் செல்வி தனியாக வீட்டில் தேர்வு பேப்பர் திருத்திக் கொண்டிருந்தபோது, 7 நபர்கள் தலையில் குரங்குக்குல்லா மற்றும் ஜெர்கின் அணிந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த தமிழ்ச்செல்வின் முகத்தை துணியால் அமுக்கியும், கைகளை கட்டியும்,கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த தாலி செயின், மோதிரம், வளையல் என எட்டு பவுன் தங்க நகையும் , 2000 ரூபாய் பணத்தையும் திருடிக் கொண்டிருக்கும்போது  பாட்டி வீட்டிற்கு சென்று இருந்த மகன் வரவே திருடிக் கொண்டிருந்த ஏழு நபர்களும் வீட்டின் பின் புறம் வழியாக ஓடி தப்பிச் சென்றனர்.

 இவர்கள் இருவரும் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அவர்களை துரத்திச் சென்றனர். இருப்பினும்  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தப்பித்து சென்று விட்டனர். உடனடியாக பந்தல் ஒரு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பந்தலூர் காவல் நிலையத்தார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது வீட்டிற்கு அருகில் கேட்பார் என்று கிடந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.இதில் கொள்ளையர்கள் வந்திருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர் எனவே மோட்டார் சைக்கிள் ரகசிய இடத்தில் வைத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வங்கி ஏ.டி.எம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளை..!! போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது..!!

இதனிடையே சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வீட்டில் தனியாக இருந்த பெண்ணை முகமூடி கொள்ளையர்கள் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: உடைந்து கிடந்த பூட்டு... ஆடிட்டர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... ஒட்டுமொத்த குடும்பமே கதறல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share