×
 

14 சிறார் உட்பட 261 பேரை சீரழித்த காம கொடூரன்!! சோஷியல் மீடியாவில் வலை!! 1,700 ஆபாச படங்கள்!!

தென் கொரியாவில், சமூக வலைதளங்கள் வாயிலாக சிக்கிய சிறார் உட்பட, 261 பேரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை வழக்கில், 33 வயது இளைஞர் கிம் நோக்-வானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக டெலிகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, 14 சிறார்கள் உட்பட 261 பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்து வந்த கிம் நோக்-வான், சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

கிம் நோக்-வான், பெண்களின் சமூக வலைதள பக்கங்களில் உள்ள கவர்ச்சி புகைப்படங்களைச் சேகரித்து, அவர்களது தனிப்பட்ட தகவல்களைத் திரட்டினார். பின்னர், “உன் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டி, அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். 

இவ்வாறு 261 பேரை பாதித்தவர், அவர்களுடன் நடந்த பாலியல் உறவுகளை வீடியோவாகப் பதிவு செய்து, மேலும் மிரட்டி பணம் பறித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், சக ஊழியர்களையும் மிரட்டி பணம் வசூலித்துள்ளார். இவர் தயாரித்த ஆபாச வீடியோக்களும் படங்களும் சுமார் 1,700 ஆகும்.

இதையும் படிங்க: சீன அதிபருடன் போனில் பேசிய ட்ரம்ப்!! முடிவானது முக்கிய ஒப்பந்தம்! ஜப்பானுக்கு வார்னிங்!

கடந்த ஜனவரி மாதம் ஒரு பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் கிம் நோக்-வானை கைது செய்தனர். விசாரணையில் அவரது குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளியாகின. இதுவரை தென் கொரியாவில் நடந்த டிஜிட்டல் பாலியல் குற்றங்களில் மிக மோசமான வழக்குகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கிம் நோக்-வானுக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், அவரது தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த தடை விதித்தது. மேலும், அவருக்கு எதிராக பாலியல் குற்றங்களில் தொடர்புடைய ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு 2 முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தென் கொரியாவில் ‘என்-த் ரூம்’ வழக்குக்குப் பிறகு மிகப்பெரிய டிஜிட்டல் பாலியல் குற்ற வழக்காக இது பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறார்களை மிரட்டும் குற்றங்களுக்கு எதிராக கடும் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன.

இதையும் படிங்க: செங்கோட்டையன் கோட்டையை அசைக்க களமிறங்கும் இபிஎஸ்!! குறி வைக்கப்படும் ஈரோடு, கோபி தொகுதிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share