×
 

பிளான் பக்காவா இருக்கணும்… தவெகவுக்கு வழிகாட்ட Ex. ஐஜி தலைமையில் குழு அமைப்பு..!

தவெக தொண்டர் அணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். இந்த உற்சாகம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கரூர் மாவட்டத்தின் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம்.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை நடத்தினார். விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 உயிர்கள் அனாமத்தாக பறிபோனது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டை உலுக்கியது.

இதனால் முடங்கிப் போன தமிழக வெற்றிக் கழகம் மெல்ல மீண்டு வருகிறது. கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தவெக தொண்டர் அணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐஜி ரவிக்குமார் தலைமையில் குழு அமைத்துத் தொண்டர் அணிக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அதிரடி காட்டும் சிபிஐ... வேலுச்சாமிபுரம் வணிகர்களிடம் தீவிர விசாரணை...!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஷபிபுல்லா Ex டிஎஸ்பி, சிவலிங்கம் Ex டிஎஸ்பி, அசோகன் Ex DC உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்று உள்ளனர். பிரச்சார நேரங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வது தொடர்பாகவும் இந்த குழு ஆலோசனை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இவ்ளோ பேசுறீங்களே… சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறாது ஏன்? SIR விவகாரத்தில் விஜய் சரமாரி கேள்வி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share