புனே அழகி சாவில் மர்மம்!! தற்கொலையில் திடீர் திருப்பம்!! கணவன் கையில் சடலம்! வெளியானது சிசிடிவி காட்சி!
கடந்த மே 12 அன்று வீட்டில் பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்
டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 33 வயது ட்விஷா ஷர்மா (முன்னாள் மிஸ் புனே 2012) மரணம் வரதட்சணை கொடுமை சம்பவமா அல்லது தற்கொலையா என்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா, 2025 டிசம்பரில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான வழக்கறிஞர் சமர்த் சிங்கைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு போபாலில் கணவர், மாமனார் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதியான மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த மே 12-ம் தேதி வீட்டில் பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ட்விஷாவின் குடும்பத்தினர் இது வரதட்சணை கொடுமை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும், போபாலில் இருக்க விருப்பமில்லாமல் நொய்டா திரும்ப விரும்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வரதட்சணை தராததால் ஆத்திரம்?! கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி! முதலாமாண்டு திருமண நாளில் கணவன் வெறிச்செயல்!
உயிரிழப்புக்கு சில நிமிடங்கள் முன்பு வரை குடும்பத்தினருடன் போனில் பேசிய ட்விஷா, நெருங்கிய தோழி மீனாட்சிக்கு இன்ஸ்டாகிராமில் “நான் மாட்டிக்கொண்டேன். நீ மாட்டிக்கொள்ளாதே” என்ற உருக்கமான செய்தியை அனுப்பியுள்ளார்.
ட்விஷாவின் குடும்பத்தினர், மாமியார் ஓய்வுபெற்ற நீதிபதி என்பதால் விசாரணை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வீட்டு முன்பும், டெல்லி ஜந்தர் மந்தரிலும் போராட்டம் நடத்தினர்.
CCTV footage emerges in Twisha Sharma murder case (Bhopal):
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 18, 2026
31-year-old Twisha is seen climbing stairs shortly before her death. Her husband Samarth Singh & others attempt CPR. Ex-judge mother-in-law Giribala Singh enters a room. Later, three people carry her body downstairs. pic.twitter.com/mRRc9NvEP0
போபால் எய்ம்ஸ் மருத்துவமனை பிரேதப் பரிசோதனையில் தூக்கிட்டு தற்கொலை என உறுதி செய்யப்பட்டாலும், தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ட் காவல்துறையால் மருத்துவர்களுக்கு வழங்கப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மேலும், வீட்டு மாடியில் இருந்து ட்விஷாவின் உடலை கணவரும் இரு ஆண்களும் தூக்கி வரும் வீடியோ வெளியாகி பெரும் ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. மாமியார் கிரிபாலா சிங், ட்விஷா மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் போதைக்கு அடிமை எனக் கூறியுள்ள நிலையில், காவல்துறை அதற்கு ஆதாரம் இல்லை என மறுத்துள்ளது.
இந்த வழக்கில் கணவர் சமர்த் சிங், மாமியார் கிரிபாலா சிங் மற்றும் மாமனார் ஆகிய மூவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. ட்விஷா மரணம் தொடர்பான உண்மை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என் ரூமுக்கு தனியா வா!! கொஸ்ட்டீன் பேப்பர் தரேன்!! மாணவியிடம் அத்துமீறிய கல்லூரி பேராசிரியர் கைது!