×
 

700க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமை! பிறப்புறுப்பில் பாட்டிலை நுழைத்து சித்திரவதை!

கொடுமை என்னவெனில் பாதிக்கப்பட்டோர் மற்றும் தன்னார்வலர்கள் புகார் அளித்தும் பல வழக்குகளில் பல ஆண்டுகளாக அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி. ரூபர்ட் லோவ் பேசும்போது, நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் சுரண்டல் கும்பல் சம்பவங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். வெள்ளையின சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை இன அடிப்படையில் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூர சம்பவங்கள் பற்றி அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

பல்வேறு பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்களின் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டிய எம்.பி. லோவ், “இது தெளிவான இன அடிப்படையிலான தாக்குதல்” என்று கூறினார். ஒரு கர்ப்பிணிப் பெண் 600 முதல் 700 ஆண்களால் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், மற்றொரு சிறுமியின் முகத்தில் சிகரெட்டால் சுட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், 12-13 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் மதுபான பாட்டில் நுழைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.

“உன் கடவுள் எங்கே? அவர் உனக்காக வருவாரா?” எனக் கேட்டு ஒரு இளம்பெண்ணின் கிறிஸ்தவ நம்பிக்கையை குலைத்த சம்பவமும், “என்னுடன் பாதிக்கப்பட்ட அனைவரும் வெள்ளையினப் பெண்களாகவே இருந்தனர்” என்ற பாதிக்கப்பட்டவரின் கூற்றும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஒரு டீனேஜ் சிறுமி, வேனில் 15 முதல் 20 வெள்ளையின சிறுமிகள் நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண்... சர்ச்சையை கிளப்பிய அமைச்சரின் கருத்து..! நயினார் சரமாரி கேள்வி..!!

2002-ம் ஆண்டு முதல் இத்தகைய சம்பவங்கள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக ரோதர்ஹாம் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் பாரம்பரியம் கொண்ட ஆண்களின் கும்பல்கள் சிறுமிகளை குறிவைத்து செயல்பட்டதாக புகார்கள் உள்ளன. பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தும், பல ஆண்டுகளாக போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் இங்கிலாந்து முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் இன அடிப்படையிலான சுரண்டல் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி நடத்தையில் சந்தேகம்! ஒட ஓட விரட்டி வெட்டிக் கொலை! ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share