×
 

குடியைக் கெடுத்த குடி...!! - தலைக்கேறிய மதுபோதை... வேலூரில் பெற்ற தந்தைக்கு மகனால் நேர்ந்த பயங்கரம்...!

மது போதையில் மகன் தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர், சலவன் பேட்டை, அம்மணாங் குட்டை ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (வயது 70). தச்சுத் தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் (42). சக்திவேலுக்கு 2 மனைவிகள் இருந்தனர். மது போதைக்கு அடிமையான சக்திவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வந்து மனைவிகளை அடித்து துன்புறுத்தியதால் இருவரும் அவரை விட்டு பிரிந்து சென்றனர்.

இரவு நேரத்தில் தந்தையும், மகனும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு தந்தையும் மகனும் வீட்டில் அமர்ந்து ஒன்றாக மது குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சந்திரன் மகனிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றித் திரிகிறாய் என கேட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் வீட்டிலிருந்த கோழியை அறுக்கும் கத்தியை எடுத்து வந்து தந்தையின் கழுத்தின் பின்புறத்தில் சரமாரியாக வெட்டினார். 

இதையும் படிங்க: ரவுடி கொலையில் இளம் பெண் கைது... குடும்பமே சேர்ந்து செய்த சதி... ‘மனைவிகளுக்கு’ வலைவீச்சு...!

மேலும் முதுகில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சந்திரன் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

அக்கம் பக்கத்தினர் இது குறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திரன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மது போதையில் மகன் தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: துடிக்க துடிக்க கொடூரம்...!! - 5 மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்... பகீர் காரணம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share