×
 

விஜய் அதிமுகவுக்கு மாற்றா? சசிகலாவின் SUDDEN ரியாக்ஷன்!

விஜய் அதிமுகவுக்கு மாற்றா என்ற கேள்விக்கு சசிகலா பதில் அளித்தார்.

விஜயின் அரசியல் பிரவேசம் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் த.வெ.க-வை தொடங்கியதோடு தொடங்கியது. ஆனால், அவரது பேச்சுகளில் அண்ணாவும் எம்ஜிஆரும் தொடர்ந்து இடம்பெறுகின்றன. உதாரணமாக, 2025 ஜனவரியில் வெளியான அவரது ஜனநாயகன்' திரைப்படத்தின் போஸ்டரில், எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடல் வரி பயன்படுத்தப்பட்டது. இது எம்ஜிஆரின் புரட்சிகர இமேஜை விஜய் தன்னுடன் இணைக்கும் முயற்சியாகக் கருதப்பட்டது.

அதே மாதிரி, ஆகஸ்ட் 2025-ல் மதுரையில் நடைபெற்ற த.வெ.க-வின் இரண்டாவது மாநில மாநாட்டில், மேடையின் உச்சியில் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருடன் விஜயின் கட்-அவுட் அமைக்கப்பட்டது. இது 1967-ல் அண்ணாவும், 1977-ல் எம்ஜிஆரும் ஆட்சியைப் பெற்றதை நினைவூட்டி, 2026 தேர்தலில் த.வெ.க-வின் வெற்றியை ஏற்படுத்தும் என விஜய் கூறினார். ஆனால், இந்தப் பயன்பாடு விமர்சகர்களைத் தூண்டியது. முதன்மையான விமர்சனம், இது வாக்காளர்களை ஏமாற்றும் தந்திரமானது என்பதே.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழ்நாட்டில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் இல்லாமல் யாராலும் அரசியல் செய்ய முடியாது., விஜய் வாக்குகளுக்காகவே அவர்களைப் பயன்படுத்துகிறார் என்று கூறி இருந்தார். விஜயின் அரசியல் பிரவேசம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சிலர் கூறி வரும் நிலையில், விஜய் அதிமுகவிற்கு மாற்று அரசியலா என்ற கேள்வி சசிகலாவிடம் எழுப்பப்பட்டது. அப்போது, 

இதையும் படிங்க: ஓஹோ இதுக்குத்தானா? - விஜயின் சனிக்கிழமை ரகசியத்தை சல்லி சல்லியாய் நொறுக்கிய பொன்முடி...!

அண்ணா, MGR போட்டோக்களை விஜய் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கும் அவர் அதிமுகவுக்கு மாற்றாக மாற முயற்சிக்கிறாரா என்ற கேள்விக்கும் சசிகலா பதிலளித்தார். புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் முதலில் தங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறினார். விஜய் திமுக மீது கோபத்தை வெளிப்படுத்துகிறார் அவ்வளவு தான் என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: “டேய்... உன் வீட்டு வாசல்ல எவன்டா வந்து நின்னான்?” - விஜய்யை ஒருமையில் விளாசிய சீமான்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share