×
 

மேற்காசியாவில் நீடிக்கும் பதற்றம்! ஹார்முஸ் ஜலசந்தியை எப்படி பாதுகாக்கலாம்?! 30 நாடுகள் ஆலோசனை!

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்க, 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் பங்கேற்கும் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் லண்ட னில் தொடங்கியது.

உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழியான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் பாதுகாப்பாக திறப்பது மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்க, 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தளபதிகள் பங்கேற்ற இரண்டு நாள் அவசர ஆலோசனைக் கூட்டம் லண்டனில் நேற்று தொடங்கியது.

ஈரான் மீதான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பாதையை மீண்டும் இயக்குவதற்கு பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்து ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கூட்டணி நாடுகளின் உதவி தேவையில்லை” என்று கூறியிருந்த நிலையில், ஐரோப்பா, ஆசியா மற்றும் மேற்காசியாவைச் சேர்ந்த 50 நாடுகள் பிரிட்டனின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஏற்கனவே வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், நேற்று லண்டனில் நேரடிக் கூட்டம் தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 30 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அமைச்சர்கள் மற்றும் உயர் ராணுவத் தளபதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: பழிக்கு பழி!! அமெரிக்க ராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்! மூளும் போர்?!

கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயங்கள்:

  • வணிகக் கப்பல்கள் எவ்வித அச்சமும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள்
  • கூட்டுப் படைகள் நிறுத்தப்பட்டால் அவற்றின் கட்டுப்பாட்டு அமைப்பு எப்படி இருக்க வேண்டும்
  • நாடுகளுக்கு இடையே ராணுவத் திறன் பகிர்வு மற்றும் ஒருங்கிணைப்பு

நிலையான போர் நிறுத்தம் ஏற்பட்டவுடன், தாமதமின்றி ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பான முறையில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான விரிவான திட்டம் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எண்ணெய் இறக்குமதியில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. எனவே இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டன் கூட்டம் இன்றும் தொடரும். இதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா கப்பல் சிறைபிடிப்பு!! ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share