×
 

காசா மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேல்... ஒரே நாளில் 80 பேர் பலி; ஆங்காங்கே கேட்கும் மரண ஓலம்!!

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இன்று ஒரேநாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். இதை அடுத்து காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த போர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் போர் நீடிப்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்.. இஸ்ரேலுக்கு போப் லியோ வலியுறுத்தல்..!

காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் காசாவுக்கு மற்ற நாடுகள் அனுப்பும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு பசி, பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு ஐரோப்பிய நாடுகள் உள்பட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனிடையே காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இன்று ஒரேநாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் சரமாரியாக குண்டுமழை பொழிந்து வருகிறது. இதில் அங்கிருந்த கட்டிடங்கள் உருக்குலைந்தன. இந்த இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பிள்ளைகளை பறிகொடுத்து பெற்றோரும், பெற்றோரை பறிகொடுத்து பிள்ளைகளும் ஆங்காங்கே கதறி வருகின்றனர்.

இதையும் படிங்க: உணவுக்காக கையேந்தும் நிலைமை..! பசி, பட்டினியால் தவிக்கும் காஸா மக்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share