போர்க்களமாக மாறிய எண்ணெய் தொழிற்சாலை... விடிய, விடிய போராடிய வீரர்கள்... தற்போதைய நிலவரம் என்ன?
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஈரான் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் அடுத்த விச்சூரில் எண்ணெய் கிடங்கில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒரு லட்சம் லிட்டர் வரை பேரல்களில் ஆயில் சேமித்து வைக்கப்பட்ட இந்த எண்ணெய் கிடங்கில் பற்றிய தீயில் பேரல்கள் வெடித்து சிதறின. தீயணைப்பு வீரர்கள் அருகே சென்று தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்.
10க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடினர். ஆயில் சேமித்து வைக்கப்பட்ட பேரல்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறி அந்தரத்தில் பறந்தன.
சுமார் 50 அடி உயரத்திற்கு பேரல்கள் வானத்தை நோக்கி பறந்து தீப்பிடித்து கீழே விழுந்து சிதறின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு பேரல்கள் முழுவதுமாக வெடித்து சிதற காத்திருந்தனர்.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால்!! அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும்! ட்ரம்ப் வார்னிங்!!
சுமார் 15 மணி நேரம் கொழுந்து எரிந்த தீ அதிகாலையில் அடங்கியது. கிடங்கில் தற்போது புகைந்து வருவதால் 3 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு கிடங்கிற்குள் சென்று ஜேசிபி பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அவற்றை கிளரி முழுமையாக தீ அமைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஈரான் மீதான தாக்குதலை ஒத்தி வைத்துள்ளேன்!!! முக்கிய பேச்சுவார்த்தைகள் காரணமாக ட்ரம்ப் முடிவு!