×
 

திருச்சுழி தொகுதியால் பிரச்சனை..! EPS வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்..! பதற்றம்..!!

திருச்சுழி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதால் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை முற்றுகை இட்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுகளில், அதிமுக 169 தனது பங்காக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது. பாஜகவுக்கு 27 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள், அ.ம.ம.க.வுக்கு 11 தொகுதிகள் உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டில் பாஜகவுக்கு விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி தொகுதியும் இடம் பெற்றது.

திருச்சுழி தொகுதி அதிமுகவுக்கு மிகவும் பலமான இடமாகக் கருதப்படும் பகுதி. இங்கு அதிமுகவின் உள்ளூர் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நீண்டகாலமாக தொகுதி வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனவே, இந்தத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கிய முடிவு அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. 

திருச்சுழி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை முற்றுகையிட்டனர். திருச்சி தொகுதியை பாஜகவிற்கு கொடுக்கக் கூடாது என்றும் அதிமுகவிற்கு தான் கொடுக்க வேண்டும் எனவும் கூறி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: “மனித உயிருக்கு ஆபத்து...” - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது வழக்கு - பரபரப்பு காரணம்...!

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் காரையும் அதிமுகவினர் வழிமறித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதேபோல் பல்வேறு தொகுதிகளில் தங்கள் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க: மிஸ் ஆக கூடாது..!! ஆர்.பி உதயகுமார் காரில் அதிரடி சோதனை... தேர்தல் பறக்கும் படையினர் மும்முரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share