அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!
சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள சிவி சண்முகம் அலுவலகத்தில் வேலுமணி தரப்பு அதிமுகவினர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்டுள்ள சில உள்கட்சி பதற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பல மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தின் போது அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன் கலந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்தார். இது கட்சியின் மேல் தலைமைக்கு ஒற்றுமை நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
வேலுமணி தரப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் படைத்த அவை தலைவர் தமிழ் மகன் உசைன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள், புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனங்கள் உள்ளிட்ட பின்னணியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கட்சியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இது ஒரு முக்கிய அடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: களேபரமான உட்கட்சி பிரச்சனை..! அதிமுக மா. செ. கூட்டம்..! EPS-க்கு அவைத் தலைவர் ஆதரவு..!
இந்த நிலையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்தில் வேலுமணி தரப்பினர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஆலோசனை முடிந்து அதிமுக அலுவலகத்திற்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்த நிலையில் வேலுமணி தரப்பு இந்த அவசர ஆலோசனையை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 25 MLAக்களும் கம்முனு இருந்திருந்தா எலெக்ஷன் வந்திருக்கும்..! அதிமுக EX. அமைச்சர் ஆவேசம்..!