×
 

நெக்ஸ்ட் டார்கெட் சாம்சங்..! அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் அதிபர் டிரம்ப்..!

ஐபோன் நிறுவனத்தை தொடர்ந்து அதன் முக்கிய தொழில் போட்டியாளரான சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக வரி விதிப்பு விஷயங்களை மறந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது மீண்டும் புதிய வரிகளை விதிக்கத் தொடங்கிவிட்டார். அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பொறுப்பேற்றபின் அதிபர் ட்ரம்ப் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் உலக நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை விதித்து வருகிறார். இதில் சீனாவுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். 

அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அதிக வரியும், குறைவான வரிவிதிக்கும் நாடுகளுக்கு குறைந்தவரியும் அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளார். பாஸ்போர்ட் கெடுபிடி, வரிவிதிப்பு, நிதியுதவி நிறுத்தம், குடியேற்றக் கொள்கை, ஊழியர்கள் குறைப்பு, கனடா, கிரீன்லாந்து, காஸா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர திட்டம் எனப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதிபர் டிரம்ப். இதுதவிர, வேறு புதிய அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் அமெரிக்காவில் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: வேறு நாட்டில் ஐபோன் உற்பத்தி.. அமெரிக்காவில் விற்றால் 25% வரி.. அதிபர் டிரம்ப்பின் அடுத்த ஷாக் மூவ்..!

இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்றொரு நிறுவனமான சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “வரிவிதிப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சாம்சங் மற்றும் இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் எந்த நிறுவனத்திற்கும் பொருந்தும். இல்லையெனில், அது நியாயமாக இருக்காது. அமெரிக்காவில் தொழிற்சாலை அமைத்தால் மட்டுமே அவர்களுக்கு வழி கிடையாது. இது அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது மட்டுமே. மேலும் இந்த நடவடிக்கை ஜூன் மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படலாம்" என்று கூறினார்.

தென் கொரியா, வியட்நாம், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் தனது ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் சாம்சங் நிறுவனம், இந்த வரிவிதிப்பு, குறிப்பாக வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 46% வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும் இந்தியாவில் தயாரித்தால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்த டிரம்ப், இந்தியாவில் ஐ-போனை குறைந்த அளவே தயார் செய்யுங்கள், அமெரிக்காவில் உற்பத்தியை அதிகப்படுத்துங்கள் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: சாம்சங் ஊழியர்கள் செம்ம குஷி...முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share