×
 

வேறு நாட்டில் ஐபோன் உற்பத்தி.. அமெரிக்காவில் விற்றால் 25% வரி.. அதிபர் டிரம்ப்பின் அடுத்த ஷாக் மூவ்..!

இந்தியாவிலோ அல்லது பிறநாடுகளிலோ உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் ஐபோன்கள் விற்கப்பட்டால் 25% வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக வரி விதிப்பு விஷயங்களை மறந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது மீண்டும் புதிய வரிகளை விதிக்கத் தொடங்கிவிட்டார். அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பொறுப்பேற்றபின் அதிபர் ட்ரம்ப் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் உலக நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை விதித்து வருகிறார். இதில் சீனாவுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். 

அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அதிக வரியும், குறைவான வரிவிதிக்கும் நாடுகளுக்கு குறைந்தவரியும் அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளார்.

இதையும் படிங்க: சாரே! கொல மாஸு! இறங்கி அடிக்கும் இந்தியா.. பயத்தில் பாக்., அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை தெறிக்கவிட்ட ஜெய்சங்கர்..!

அமெரிக்க திரைப்படத்துறை வேகமாக அழிந்து வரும் நிலையில், அதனை மீட்கும் விதமாக அமெரிக்காவுக்கு வெளியே வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை அமெரிக்காவில் ரிலீஸ் அல்லது திரையிடப்பட்டால் அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது புதிய வரிவிதிப்பை கொண்டு வந்துள்ளார் அதிபர் டிரம்ப். அதாவது இந்தியாவிலோ அல்லது பிறநாடுகளிலோ உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் ஐபோன்கள் விற்கப்பட்டால் 25 சதவிகிதம்  வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியின் பெரும் பகுதியை இந்தியாவிலிருந்தே தயாரிக்கிறது. 2024ம் ஆண்டு, இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி சுமார் ரூ.1.1 லட்சம் கோடியைத் தொட்டது. இது முந்தைய ஆண்டைவிட 42% அதிகமாகும். Pegatron, Foxconn, Tata Electronics போன்ற நிறுவனங்களின் மூலம் இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தியாகும் நிலையில் இவற்றுள் 70 முதல் 80% உற்பத்தி தமிழ்நாடு வசமே உள்ளது.

முன்னதாக இந்தியாவில் ஐ-போனை குறைந்த அளவே தயார் செய்யுங்கள், அமெரிக்காவில் உற்பத்தியை அதிகப்படுத்துங்கள் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு அதிபர் ட்ரம்ப் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ரஷ்யாவில் தரமான சம்பவம்.. பாக்., முகத்திரையை டார் டாராக கிழித்த கனிமொழி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share