×
 

பாக். வான்வெளி மூடல்.. புதிய வழிதடத்தைப் பிடித்து செலவு, நேரத்தைக் குறைத்த இந்திய விமானங்கள்..!

பாக். வான்வெளி மூடப்பட்டதையடுத்து புதிய வழிதடத்தைப் பிடித்து செலவு, நேரத்தைக் குறைத்துள்ளது இந்திய விமானங்கள்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் தனது வான்வெளியே மூடியதையடுத்து, ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்காவுக்கு செல்ல இந்திய விமானங்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தற்போது அதற்கு மாற்றாக வேறு ஒரு வழிதடத்தை பயன்படுத்த இந்திய விமானங்கள் தொடங்கியுள்ளன.

மங்கோலியா நாட்டின் வான்வெளித் தடத்தைப் பயன்படுத்தி இந்திய விமானங்கள் வடஅமெரிக்கா நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்வதால் எரிபொருள் செலவும் குறைகிறது, நேரமும் குறைகிறது.

இதையும் படிங்க: ரூ.7,000 கோடி நஷ்டம்..! மூடப்பட்ட பாக். வான்வெளி.. இந்திய விமான நிறுவனங்களுக்கு சிக்கல்..!

டெல்லியிலிருந்து புறப்படும் இந்திய விமானங்கள் கொல்கத்தாவில் தொழில்நுட்ப ரீதியாக நிறுத்தம் செய்து பரிசோதனை செய்துவிட்டு, அங்கிருந்தவாரே வடஅமெரிக்காவுக்கு செல்கின்றன. டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமானசேவையையும் மங்கோலியா வான்வெளியை பயன்படுத்தியே செல்கின்றன. இதனால் பறக்கும் நேரம், எரிபொருள் செலவும் ஏர் இந்தியாவுக்கு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடஅமெரிக்க நாடுகளுக்கு வாரத்துக்கு 71 விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது, இதில் 54 விமானங்கள் டெல்லியிலிருந்து புறப்படுகின்றன. சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க், கனடாவின் வாக்கூவர், டொராண்டோ ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நகரங்களுக்கு டெல்லியிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானங்கள் மங்கோலிய வான்வெளி மூலமே வடஅமெரிக்காவுக்கு செல்கின்றன. பசிபிக் கடற்பகுதி வழியாக, வடஅமெரி்க்காவை அடைகின்றன. வான்கூவரிலிருந்து டெல்லி செல்லும் விமானம் ஏஐ186, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து டெல்லி செல்லும் ஏஐ174 விமானம், கடந்த சில நாட்களாக மங்கோலிய வான்வெளியே பயன்படுத்தியே செல்கின்றன என்று விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியிலிருந்து புறப்படும் விமானங்கள் கொல்கத்தாவில் இணைப்பு விமானத்தை பெறும்போதும், மங்கோலிய வான்வெளியேப் பயன்படுத்தியே செல்கின்றன. இதுபோன்ற மாற்றுஏற்பாட்டில் செல்லும்போது ஐரோப்பிய நாடுகளில் இந்திய விமானங்கள் தரையிறங்காது, நீண்டநேரம் வானில் பயணித்து கொல்கத்தா அல்லது டெல்லிக்கு வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் தொழில்நுட்ப ரீதியாக நிறுத்தம் செய்தால் இந்தியவிமானங்களுக்கு தரையிறங்கும் கட்டணம், எரிபொருள் செலவு அதிகரிப்பு, நிலப்பகுதியை பயன்படுத்தும் கட்டணம், டிரான்சிஸ்ட் விசா ஆகிய செலவுகள்இருக்கின்றன. இவை அனைத்தும் தற்போது மங்கோலிய வழியை பயன்படுத்துவதால் குறைகின்றன.

இந்திய விமானப்போக்குவரத்து இயக்குநகரத்தின் விதிப்படி விமானஊழியர்கள் தொடர்ந்து 8 மணிநேரம் வரை மட்டுமே பணியாற்றலாம். அதன்பின் பணியாற்றத் தேவையில்லை, ஆனால் மங்கோலிய வான்வெளி மூலம் வரும்போது, விமான ஊழியர்கள் கூடுதல் நேரத்துக்கு உழைக்க வேண்டியதும், விதிகளை மீறும்நிலையும் ஏற்பட்டுள்ளது.

நீண்டநேரம் பறக்கும் நாடுகளுக்குச் செல்லும்போது கூடுதல் நேரத்துக்கு பணியாற்றும் தேவையையும் ஊழியர்களிடம் விமானநிறுவனம் முன்கூட்டியே தெரிவித்துள்ளது. 14 மணிநேரம் வேலைபார்க்க வேண்டியிருப்பதால், இரு ஷிப்ட்களில் பணியாற்ற சில நேரங்களில் ஊழியர்கள் செல்கிறார்கள்.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பெல் வில்சன் ஊழியர்களுக்கு விடுத்த அறிவிப்பில் “வடஅமெரிக்க நகரங்களுக்கு செல்ல புதிய வான்வெளியை பயன்படுத்தும்போது நீண்டநேரம் பயணிக்க வேண்டியுள்ளது. சில புதிய தொழில்நுட்ப நிறுத்தங்களையும் சேர்த்துள்ளோம். ஆதலால் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நகரங்களுக்கும் இயக்கப்படும் விமானங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை தேவைக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ளவும்” எனத் தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: பாகிஸ்தான் வான்வழிமூடல்.. எகிறப்போகும் இந்தியாவின் விமானக் கட்டணம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share