ரூ.7,000 கோடி நஷ்டம்..! மூடப்பட்ட பாக். வான்வெளி.. இந்திய விமான நிறுவனங்களுக்கு சிக்கல்..!
பாகிஸ்தான் விண்வெளி மூடப்பட்டதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.7ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அரசு தங்கள் வான்வெளியை மூடி இந்திய விமானங்கள் பறக்கத் தடைவிதித்துள்ளதால், ஆண்டுக்கு ரூ.7ஆயிரம் கோடி இந்திய விமான நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் வான்வெளியே பயன்படுத்தும்போது பிற நாடுகளுக்குச் செல்லும் தூரம் குறையும், ஆனால், வான்வெளியே மூடிவிட்டதால், இந்திய விமானங்கள் சுற்றிச் செல்ல வேண்டியதிருப்தால் எரிபொருள் செலவு, காலநேரம் அதிகரிக்கும், இதன் சுமை பயணிகள் மீது ஏற்றப்படும் என்றாலும் முழுமையாக சுமை ஏற்ற முடியாது என்பதால், விமானநிறுவனங்களுக்கு கனிசமாக இழப்பு ஏற்படும்.
இதையும் படிங்க: கதை முடிஞ்சு..! சிந்து நதியில் 6 அணைகளைக் கட்ட இந்தியா ரெடி..!
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா சார்பில் ராஜாங்க ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.அதில் முக்கியமானது பாகிஸ்தான் தனது வான்வெளியே இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடைவிதித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் தங்கள் வான்வெளியே பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த தடை விதித்தன.
இந்நிலையில் பாகிஸ்தான் வான்வெளியே பயன்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளுக்கும் இந்திய விமானங்கள் சுற்றிச்செல்வதால் எரிபொருள் செலவு, டிரான்சிஸ்ட் விசா செலவு, இயக்கச் செலவு உள்ளிட்டவை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.7ஆயிரம் கோடிவரை இழப்பு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக ஏர் இந்தியா விமானநிறுவனத்துக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும், இன்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1300 கோடி இழப்பு ஏற்படும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒவ்வொரு விமானநிறுவனத்துக்கும் தனிப்பட்டரீதியில் நிதிரீதியாக ஏற்படும் பாதிப்புகளை அறிக்கையாக விமான நிறுவனங்களிடமிருந்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஓர் ஆண்டுக்கு மட்டுமே ஏற்படும் நிதி பாதிப்புகள் குறித்த அறிக்கை மட்டுமே வந்திருப்பதால், அனைத்து புள்ளிவிவரங்களையும் சரிபார்த்த பின்னரே, ஒட்டுமொத்த தாக்கம் அறியப்படும். முழு செயல்முறையும் முடியும் வரை இந்த புள்ளிவிவரங்கள் தோராயமான மதிப்பீடுகளாகவே வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் வான்வெளியே மூடியதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்குதான் நிதிரீதியாக பெரிய பாதிப்பு ஏற்படும். சர்வதேச பயணவழி வாயிலாகத்தான் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 60 சதவீத வருமானம் கிடைக்கிறது. வடஅமெரிக்காவில் 7 நாடுகளுக்கு வாரத்துக்கு 70 விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது, இதில் 58 விமானங்கள் டெல்லியில் இருந்து மட்டும் புறப்படுகின்றன. வடஅமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமானங்கள் வியன்னா மற்றும் கோபெஹன் நகரிலும் தொழில்நுட்ப ரீதியாக நிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடைநில்லா விமானம், கனடா வழியாக போயிங்777, ஏர்பஸ் ஏ350 விமானங்களையும் ஏர் இந்தியா இயக்குகிறது. இன்டிகோ விமானம் இந்தியாவின் பல்வேறுநகரங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது, இனிமேல் அது பாதிக்கப்படும். இயக்கச் செலவு அதிகரித்து, விமானக் கட்டணங்களை உயர்த்த வேண்டியதிருக்கும்.
இந்திய விமானநிறுவனங்களுக்கு ஏற்படும் அதே பாதிப்புகளைப் போலவே பாகிஸ்தான் விமானநிறுவனங்களுக்கும் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும். இந்திய வான்வெளியே மூடிவிட்டதால், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம், சர்வதேச பயணங்களை சீனா வழியாக மாற்றியமைக்க வேண்டியிருக்கும். இது இந்த விமானங்களின் பயண நேரத்தையும், பாங்காக் சுற்றிச் செல்வது இயக்கச் செலவை அதிகரித்து நட்டத்தை என்று பாகிஸ்தான் விமானப் போக்குவரத்துப் பொருளாதார நிபுணரும் டெயில்விண்ட் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் தலைவருமான முகமது அப்சர் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாய் பெற்ற தெங்கம்பழம்..! இந்தியாவை உசுப்பேற்றும் பாக்..! நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்..!