×
 

பாகிஸ்தானை கதறவிட்ட ஆபரேசன் சிந்தூர்.. இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்.. மத்திய அரசு அதிரடி!

‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக 'ஆபரேசன் சிந்தூர்' நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. இதேபோல் பாகிஸ்தானும் ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல்  நடத்தியதாகம் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் தாக்குதலைப் பொறுத்து இந்தியாவின் பதில் நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பால் அபிஷேகம்; தமிழகத்துக்கு கடும் விமர்சனம்... வைரலாகும் எக்ஸ் தள பதிவு!!

இக்கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் நடந்த தாக்குதல் குறித்து விரிவாக எதிர்கட்சிகளுக்கு விளக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அடுத்தபடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு  அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தன. இந்நிலையில் இன்று மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்
நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கப்சா.. அம்பலப்படுத்திய சர்வதேச ராணுவ நிபுணர்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share