×
 

ஓபிஎஸுக்காக களமிறங்கும் அண்ணாமலை; டெல்லியை நோக்கி மாஸ்டர் பிளான் - இபிஎஸ், நயினாருக்கு காத்திருக்கும் ஷாக்...!

தனக்காக கூட நின்ற ஓபிஎஸை திரும்பவும் பாஜக கூட்டணிக்குள்ள கொண்டு வர டெல்லியில வேலை பார்த்துக்கிட்டு இருக்காராம் அண்ணாமலை.

ஓ.பன்னீர்செல்வத்தை உதாசீனப்படுத்தி  பாஜக - அதிமுக கழட்டிவிட்டதால், வர உள்ள சட்டமன்ற தேர்தலில் 86 தொகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் வஞ்சிக்கப்பட்டதாக அவர் சார்ந்த சமூகத்தினர் கருதுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவது, போஸ்டர் ஒட்டுவது என ஓபிஎஸ் சார்ந்த சமூத்தினர் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். 

இதேநிலை நீடித்தால் கூட்டணிக்கு நல்லது கிடையாது என சமீபத்தில் நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து வைத்த போது நயினார் நாகேந்திரனும் எடப்பாடி பழனிசாமிக்கு எடுத்துச் சொன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே,  பாஜக கூட்டணிக்குள்ள ஓபிஎஸ் திரும்பவும் கொண்டுவர டெல்லியில அமித்ஷா, பிரதமர் வரைக்கும் அழுத்தம் அண்ணாமலை அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் நயினார் நாகேந்திரன் கோஸ்டி, அண்ணாமலை கோஸ்டின்னு ரெண்டா பிரிஞ்சிருக்கிறது. இது பல நிகழ்ச்சிகளில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிற சூழ்நிலையில இப்ப ஓபிஎஸ் திரும்பவும் பாஜக கூட்டணிக்குள்ள கொண்டு வர நயினாருக்கு எதிரா அண்ணாமலை டெல்லியில் தன்னோட முழு பலத்தையும் காட்ட துவங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: டெல்டா, தென் மாவட்டங்களில் டப்பா டான்ஸ் ஆடப்போகுது... அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஓபிஎஸால் காத்திருக்கும் பேராபத்து...!

ஜெயலலிதா காலத்தில் நயினாரோட செல்வாக்க ஓபிஎஸ் குறைச்சாருங்கிற பேச்சு உண்டு. அதனால் தான் நயினார் பாஜக தலைவர் ஆனதும் அவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்த போது ஓபிஎஸ்க்கு டெல்லியில நல்ல மரியாதை இருந்துச்சு. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் அதிமுக தலைமை மாறும்னு ஓபிஎஸ மனசுல வச்சு ராமநாதபுரத்தில பிரச்சாரமே செஞ்சாரு அண்ணாமலை. ஓபிஎஸும் அண்ணாமலை என்ன சொன்னாலும் அப்படியே கேட்டு நடக்கக்கூடியவர். தனக்காக கூட நின்ற ஓபிஎஸை திரும்பவும் பாஜக கூட்டணிக்குள்ள கொண்டு வர டெல்லியில வேலை பார்த்துக்கிட்டு இருக்காராம் அண்ணாமலை.

ஓபிஎஸ் கூட இருக்கற வைத்தியலிங்கம் எம்எல்ஏவும் பாஜக கூட்டணியில்தான் இருக்கணும்னு ஓபிஎஸ்-க்கு பிரஷர் போடுறாராம். அதனால் தான் திமுகவில் சேர போவதாக வரும் செய்தி உண்மை இல்லை. முதலமைச்சரை விசாரிக்கத்தான் போனேன்னு ஓபிஎஸ் அறிக்கை விட்டாருங்கிறாங்க. பிரதமரே ஓபிஎஸ பார்ப்பதற்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுப்பாருங்கிறாங்க. அது கிடைச்சிட்டா ஓபிஎஸ் மறுபடியும் பாஜக பக்கம் தாவிடுவாராம். 

 

இதையும் படிங்க: மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்குள் இணைக்க திட்டமா? - சற்றும் யோசிக்காமல் நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share