வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல் ›

மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்குள் இணைக்க திட்டமா? – சற்றும் யோசிக்காமல் நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்…!

ஓபிஎஸ்ஐ மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு இருக்கிறதா? அதைப்பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அவர் வேறு இடத்திற்கு சென்று விட்டார்

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தனது வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். 

விருந்து முடிந்தபின் செய்தியாளர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வீட்டிற்கு சாப்பிடுவதற்காக அழைத்தேன் அதன் பேரில் அவரும் வந்திருந்தார். 
அனைவரும் உணவுகளை சாப்பிட்டு விட்டு சென்று விட்டனர். 

ஓபிஎஸ் நீங்கள் சொல்வதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்ற கேள்விக்கு, அதைப்பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை ஏனென்றால் அவர் வேறு இடத்திற்கு சென்று விட்டார். எங்களோடு இருந்தால் கருத்து கூறலாம். அதனால் அவர் பற்றி கருத்து சொல்ல முடியாது.

இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணியா? – மெளனம் கலைத்த ஓபிஎஸ்… வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்…!

உங்கள் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிகள் குறித்து பல்வேறு பேச்சு வார்த்தை நடந்ததா என்ற கேள்விக்கு, நாங்கள் எங்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தினோம் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி பலப்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, நிச்சயமாக எங்கள் கூட்டணி பலமாக அமையும் என்றார். 

மீண்டும் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதைப் பற்றி நான் கருத்து பேச விரும்பவில்லை. 2026-ல் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். நடைபெறும் திமுக அரசு மக்கள் விரோத அரசாக இருக்கிறது. சொத்து வரி உயர்வு மின்சார கட்டண உயர்வு பாலியல் வன்கொடுமைகள் படுகொலைகள் வட மாவட்டங்களிலும் பல படுகொலைகள் நடந்து வருகிறது. இதற்குக் காரணம் போதை பொருட்கள் தான் என்று கூறினார்.

இதையும் படிங்க: என்மேல தப்பு இல்லங்க… மறுக்கும் நயினார்! ஆதாரத்தை காட்டிய ஓபிஎஸ்.

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी