×
 

இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

இந்திய படைகள் தாக்கியதையும், நள்ளிரவில் ராணுவ தளபதி பரபரப்புடன் தன்னை போனில் அழைத்ததையும், பாக்., பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தன் வாயாலேயே, ஒப்புக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தந்த இந்தியா மீது, பாக்., ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை, பாக்., ராணுவம் மீதும் பாய்ந்தது. இதனால், 7ம் தேதி இரு தரப்பு சண்டை துவங்கியது. அந்நாட்டின் 11 விமானப்படை தளங்களை இந்தியா தகர்த்தது. நம் நாட்டில் இருந்தபடியே சக்திவாய்ந்த மிசைல்களை ஏவிய நம் விமானப்படை, பாகிஸ்தானை சுக்குநுாறாக்கியது. 

நம் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான், 10ம் தேதி உலக நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடியதுடன், நம் ராணுவ இயக்குனர் ஜெனரலை தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுத்தார். இனியும் பயங்கரவாத தாக்குதலோ, அவர்களுக்கு ஆதரவான பாக்., ராணுவ தாக்குதலோ தொடர்ந்தால், இந்தியா அதை வேடிக்கை பார்க்காது என்ற எச்சரிக்கையுடன் நம் முப்படைகள் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. 

இதையடுத்து, 10ம் தேதி இரவு பாக்., நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீல், சண்டையில் பாகிஸ்தான் வென்று விட்டதாகவும், அதன் காரணமாகவே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் கூறினார். இரு தரப்பு சண்டை நிறுத்தத்திற்கு உதவிய அமெரிக்கா, சீனா, துருக்கி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். 

இதையும் படிங்க: அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்..! கிளப்பிவிடும் அதிபர் ட்ரம்ப்..!

அந்நாட்டின் ராணுவ, விமானப்படை தளங்கள் தகர்க்கப்பட்டை மறைத்து, இந்தியப் படைகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை தாக்கியதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், நாம் தாக்கிய இடங்களை பட்டியலிட்டு முப்படை அதிகாரிகள் வீடியாே, சாட்டிலைட் படங்களுடன் ஆதாரத்தை வெளியிட்டனர். எனினும், பாகிஸ்தான் அதை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதை பாஜ மூத்த தலைவர் அமித் மாளவியா வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் ஷெபாஷ் ஷெரீப் பேசியிருப்பதாவது: 9 - 10ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் ராணுவ தளபதி அசீம் முனீர் எனக்கு தனிப்பட்ட தொலைபேசியில் அழைத்தார். இந்திய படைகள் நம் நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறினார். அதில், நுார் கான் ஏர்பேஸ் மற்றும் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடந்துள்ளதாக கூறினார் என, ஷெபாஷ் ஷெரீப் பேசியுள்ளார். 

இதுவரை, இந்திய படைகள் பாகிஸ்தானின் பொதுமக்கள் வசிக்கும் இடங்களையே தாக்கியதாக பாக்., அரசும், ராணுவமும் கூறி வந்தன. அந்நாட்டின் முக்கிய விமானப்படை தளங்களை தாக்கியதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக இந்தியாவின் வான் தாக்குதல் தடுப்பு கவசமான எஸ் 400 மற்றும் பஞ்சாப்பின் ஆதம்பூர் உள்ள ஏர்பேஸ் ஆகியவற்றை தகர்த்துவிட்டதாகவும் கதை அளந்தது. 

ஆதம்பூர் சென்று வீரர்களுடன் உரையாறியதின் மூலம், பாகிஸ்தான் கூறிய அனைத்தும் பொய் என்பதை பிரதமர் மோடி நிரூபித்தார். இந்நிலையில், இந்திய படைகள் தாக்கியதையும், நள்ளிரவில் ராணுவ தளபதி பரபரப்புடன் தன்னை போனில் அழைத்ததையும், பாக்., பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தன் வாயாலேயே, ஒப்புக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. 

அதே போல், பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள பொலாரி ஏர்பேஸ் இந்திய படைகளால் தாக்கப்பட்டதையும், அங்கு அந்நாட்டு விமானப்படை வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த மாகாண முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன் மூலம் அங்கும் அந்நாட்ட ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா குறிவைத்தது, பொதுமக்களை அல்ல என்பதும் தெளிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் பிரதமரின் இந்த பேச்சு, நம் படைகளின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் வீரியத்தையும், தாக்கத்தையும் தெளிவாக எடுத்துரைக்கிறது என, மாளவியா கருத்து பதிவிட்டுள்ளார். இந்திய படைகளின் இந்த நடவடிக்கைக்கு பிறகே பாக்., ராணுவம் நம் ராணுவத்திடம் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share