வங்கதேசத்தின் காவியம் கலிதா ஜியா காலமானார்... அரசியலில் வெற்றிடம்...!
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்.
வங்கதேச அரசியலின் முக்கியமான அத்தியாயம் ஒன்று இன்று முடிவடைந்துள்ளது. வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேசத்தின் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவருமான பேகம் காலிதா ஜியா, இன்று தலைநகர் டாக்காவிலுள்ள எவர்கேர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 80.
வங்கதேசத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தவர் பேகம் கலிதா ஜியா. அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். அவரது வாழ்க்கை, தனிப்பட்ட துயரங்களால் தொடங்கி, கடுமையான போராட்டங்கள் வழியாக உச்சத்தை அடைந்து, நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுடன் முடிவடைந்த ஒரு காவியம் போன்றது. 1945 ஆகஸ்ட் 15ஆம் தேதி, அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஜல்பைகுரியில் (தற்போது மேற்கு வங்கம்) ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்த கலிதா ஜியா, இளம் வயதிலேயே அரசியலுடன் தொடர்பு கொண்டார்.
1960இல் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மானை மணந்தார். ஜியாவுர் ரஹ்மான் 1971இல் வங்கதேச விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றியவர். பின்னர் அந்நாட்டின் ஜனாதிபதியானார். கலிதா ஜியா அரசியலில் நுழைவதற்கு முன்பு ஒரு சாதாரண குடும்பத்தலைவியாகவே வாழ்ந்தார். அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மான் 1978இல் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை (BNP) நிறுவினார். ஆனால் 1981 மே 30இல் சிட்டகாங்கில் நடந்த ராணுவ சதி முயற்சியில் ஜியாவுர் ரஹ்மான் கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை... தீக்கிரைக்கான பத்திரிகை அலுவலகம்... இந்திய தூதரகம் மீது தாக்குதல்...!
இந்தத் துயரம் கலிதா ஜியாவின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. அப்போது அவர் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், BNP தலைவர்கள் அவரை கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வலியுறுத்தினர். 1982 ஜனவரியில் கட்சியின் சாதாரண உறுப்பினராகச் சேர்ந்த அவர், 1983இல் துணைத் தலைவராகவும், 1984இல் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அரசியலில் சிறப்பாக களமாடி வந்த வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேசத்தின் தேசியவாதக் கட்சியின் தலைவருமான பேகம் காலிதா ஜியா இன்று காலமானார். அவருடைய மறைவு அரசியலின் பேரிழப்பு என்று கூறி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வங்கதேசம்: இந்தியா விசா விண்ணப்ப மையம் மூடல்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!