பாக்.,ஐ அழிக்கணும்... அந்த 93,000 துப்பாக்கிகளை கொடுங்கள்... இந்தியாவிடம் உதவி கேட்கும் பலூச்படை..!
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலுக்குப் பிறகு, பலுசிஸ்தானின் போராட்டக் குழுக்கள் மேலும் தீவிரமாகிவிட்டன.
93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தபோது கிடைத்த துப்பாக்கிகளை எங்களுக்குக் கொடுங்கள் என பலுசிஸ்தானின் விடுதலை போராட்டக் குழுவின் தளபதி இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளார்.
ஈரானைச் சேர்ந்த பலுசிஸ்தான் விடுதலை முன்னணிப்படையை சேர்ந்த தளபதி டாக்டர் அல்லா நாசர் பாகிஸ்தானுக்கு எதிரான பலுசிஸ்தானின் சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளார். பாகிஸ்தான் இராணுவம் பலுசிஸ்தானை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாலும், பலுசிஸ்தானிய மக்கள் ஒடுக்கப்படுவதாலும் பாகிஸ்தான் இராணுவத்துடன் சண்டையிட விரும்புவதாக நாசர் கூறியுள்ளார். இந்தியா மட்டுமல்ல, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானும் தனது குழுவிற்கு உதவ வேண்டும் என்று நாசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளின் பிணத்தில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை... வெட்கமற்ற பாகிஸ்தான்..!
அண்டை நாடுகளாக இருப்பதால், இந்த மூன்று நாடுகளுக்கும் தங்களுக்கு உதவ உரிமை உண்டு என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பலுசிஸ்தானின் கிளர்ச்சிக் குழுவின் தலைவரின் இந்த வேண்டுகோள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் நிலவும் நேரத்தில் வந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டுகிறது.
இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்ட டாக்டர் நாசர், ''இந்தியா எங்களுக்கு அதிகம் உதவக்கூடாது. பாகிஸ்தானில் இருந்து பறிக்கப்பட்ட அதே துப்பாக்கிகளை எங்களுக்குக் கொடுங்கள். 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் இராணுவம் உலகப் புகழ்பெற்ற முறையில் சரணடைந்தது. இந்தியா வேறு எதையும் எங்களுக்கு செய்ய வேண்டாம். அப்போது பாகிஸ்தானியர்களிம் இருந்து அவர்கள் பெற்ற 93,000 துப்பாக்கிகள், தலா 10 தோட்டாக்கள் கொண்ட அதே துப்பாக்கிகளை எங்களுக்குத் தர வேண்டும். இதன் மூலம் பாகிஸ்தான் எப்படி நிலையாக உள்ளது என்பதைக் காண்பிப்போம். பலுசிஸ்தானின் விடுதலைக்கு எங்களுக்கு எந்த ஏவுகணையோ, அணுகுண்டோ தேவையில்லை' என்றார்.
டாக்டர் அல்லா நாசர் மேலும் கூறுகையில், ''பாகிஸ்தான் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், இந்தியாவில் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கிறது என்று கூறி வருகிறது. பலூச் படை ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியாவில் இருந்து ஆயுதங்களைப் பெறுகிறது என்று தொடர்ந்து கூறப்படுகிறது. இப்படி பேச்சு வரும்போது, இந்தப் போராட்டத்தில் எங்களை தீவிரமாக ஆதரிக்குமாறு நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒரு அண்டை நாடாக, எங்கள் நியாயமான போராட்டத்தில் எங்களுக்கு உதவுவது உங்கள் கடமை'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலுக்குப் பிறகு, பலுசிஸ்தானின் போராட்டக் குழுக்கள் மேலும் தீவிரமாகிவிட்டன. இந்தியாவுடனான பதற்றத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பலுச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளனர். பலுசிஸ்தானின் பல பகுதிகளில், போராட்டக் குழுவினர் தங்கள் சுதந்திரக் கொடிகளைக் கூட ஏற்றியுள்ளன. இந்தியாவுடன் சிக்கியுள்ள பாகிஸ்தான் இராணுவத்திற்கு அடி கொடுக்க இது ஒரு நல்ல நேரம் என்று பலுச் மக்கள் கருதுகின்றனர்.
#BLF Commander Dr. Allah Nizar has sought India's help to fight the #Pakistani army that is illegally occupying #Balochistan- just give us those 93000 guns of surrendered Pak soilders with 10/10 bullets#BalochistanIsNotPakistan pic.twitter.com/czKJEV7jQd
— Chaudhary Parvez (@ChaudharyParvez) May 12, 2025
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல குழுக்கள் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக ஆயுதமேந்திய வன்முறையை நடத்தி வருகின்றன. பலுசிஸ்தானில் இயக்கங்களை பாகிஸ்தான் இராணுவம் கொடூரமாக நசுக்கி வருகிறது. ஆனால் சமீப காலங்களில், ராணுவத் தலைவர் அசிம் முனீர், பிரதமர் ஷாபாஸிற்கு அவர்களால் பிரச்சனை அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், ஒருபுறம் பாகிஸ்தான் இந்தியாவுடன் பதற்றம் கொண்டிருப்பதும் மறுபுறம் ஆப்கானிஸ்தான் எல்லையிலும் பிரச்சனையை எதிர்கொள்வதும்தான்.
இதையும் படிங்க: அம்பானிக்கு நிகரான ஆடம்பர வாழ்க்கை..! ஏழை நாட்டில் குஜாலாக அனுபவிக்கும் பாக்., ராணுவ ஜெனரல் முனீர்..!