அணுசக்தி ஒப்பந்தம்! பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்! ஈரான் - அமெரிக்கா பேச்சு! சமரச தீர்வா? போரா?
ஜெனிவாவில் அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த இரண்டாம் சுற்று அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவும் ஈரானும் இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெனிவாவில் நேற்று நடந்த இரண்டாம் சுற்று பேச்சு 3 மணி நேரம் நீடித்தது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) பேச்சு முடிந்த பிறகு ஊடகங்களிடம் கூறுகையில், “முந்தைய ஓமன் சுற்றுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் ஆக்கபூர்வமானது.
'guiding principles' என்ற வழிகாட்டு கொள்கைகளில் பொதுவான புரிதல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் உரை தயாரிப்பதற்கான தெளிவான பாதை தொடங்கியுள்ளது. இது நல்ல அறிகுறி” என்றார்.
ஈரான் அதிக அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் அபாயம் உள்ளதாக வாஷிங்டன் கூறுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைப்பதற்காக கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: ஈரானுக்கு பயம்காட்டும் அமெரிக்கா! 50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குவிப்பு!! ட்ர்ம்ப் அட்ராசிட்டி!
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதும் பதற்றத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
அரபு நாடுகளின் வேண்டுகோளால் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல் சுற்று ஓமனில் நடந்தது. அங்கு சமரசம் எட்டப்படவில்லை. இரண்டாம் சுற்று ஜெனிவாவில் நடந்தது. ஓமன் மத்தியஸ்தமே செய்தது. அமெரிக்க தரப்பில் ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரு தரப்பும் தனித்தனியாக ஒப்பந்த உரை தயாரித்து பரிமாறிக்கொள்ள உள்ளனர். அடுத்த இரண்டு வாரங்களில் ஈரான் விரிவான முன்மொழிவுகளை அளிக்கும் என அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். மூன்றாம் சுற்றுக்கு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், அரக்சி “ஒப்பந்தம் விரைவில் எட்டப்படாது. உரை தயாரிப்பு கடினமாக இருக்கும்” என எச்சரித்தார். டிரம்ப் தரப்பில் இருந்து இராணுவ அச்சுறுத்தல் தொடர்கிறது. மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கிறது.
ஆனால், இந்த முன்னேற்றம் போர் அபாயத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் இந்த பேச்சுகளை உற்று நோக்கி வருகின்றன. ஒப்பந்தம் எட்டப்பட்டால் பிராந்தியத்தில் அமைதி நிலவுமா என்பது கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் கைகோர்ப்பு! டிரம்ப்-நெதன்யாகு சீக்ரெட் பிளான்!