வரலாற்றியே அதிக சக்தி வாய்ந்த புயல்! ஜமைக்காவை புரட்டிப்போட்ட மெலிசா! நடுங்கும் கியூபா!
ஜமைக்காவை சூறையாடிய சூறாவளி மெலிசா, தற்போது கியூபாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இந்த சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவை பேரிடர் பகுதியாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
கரிபியன் தீவுகளை தாக்கிய இந்த நூற்றாண்டின் மிகக் கொடூர சூறாவளி மெலிசா, ஜமைக்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி, தற்போது கியூபாவை நோக்கி வேகமாக நகர்கிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்கா முழுவதும் மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ் ஜமைக்காவை 'பேரிடர் பகுதி' என அறிவித்துள்ளார்.
மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் தகவலின்படி, ஜமைக்காவின் நியூ ஹோப் அருகே திங்கள்கிழமை (அக்டோபர் 28) மதியம் மெலிசா 5-ஆம் நிலை சூறாவளியாக (category 5) கரையைத் தொட்டது. மணிக்கு 295 கிமீ (185 மைல்) வேக வீச்சுடன் இது தாக்கியது. இது ஜமைக்காவின் 174 ஆண்டு பதிவுகளில் மிக வலிமையான புயல் (கடந்த 1988-இல் கில்பர்ட் புயலை விடக் கொடூரமானது). உலகளவில் 2025-இல் இது மிக வலிமையான புயலாக பதிவாகி உள்ளது.
இந்த புயல் காரணமாக ஜமைக்காவில் கனமழை, நிலச்சரிவுகள், வெள்ளம் ஏற்பட்டுள்ளன. மான்டெகோ விரிகுடா, கிங்ஸ்டன் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் சேதமடைந்தன. இன்டர்நெட் இணைப்பு சாதாரணமாக 30%க்கு கீழ் வீழ்ச்சியடைந்தது. மின்சாரம், தொலைதொடர்புகள் பெரும்பாலான இடங்களில் துண்டிக்கப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவை சேவை சங்கங்கள் (IFRC) தெரிவிப்பின்படி, ஜமைக்காவில் 15 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜமைக்காவுக்கு உதவ தயாராக இருப்பதாகக் கூறினார்.
இதையும் படிங்க: விஜயின் அடுத்த மூவ்... சுற்றுப்பயணம் எப்போது? தவெக நிர்வாக குழுவில் ஆலோசனை...!
இந்த சூறாவளியால் ஜமைக்காவில் 3 பேர், ஹைதியில் 3 பேர், டொமினிக்கன் ரிபப்ளிக்கில் ஒருவர் இறந்துள்ளனர். (இன்னொரர் காணாமல் போனவர்). ஹைதி, டொமினிக்கன் ரிபப்ளிக் பகுதிகளிலும் கனமழைக்கு வெள்ளம் ஏற்பட்டது. ஜமைக்கா பிரதமர் ஹோல்னெஸ் கூறுகையில், “இது எங்கள் வரலாற்றில் மிக பயங்கரமான சூறாவளி. 5-ஆம் நிலை புயலுக்கு எந்தக் கட்டமைப்பும் தாங்காது.
மருத்துவமனைகள், குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இப்போது மீட்புப் பணிகள்தான் நம் சவால்” என்றார். அரசு 881 தற்காலிக முகாம் இடங்களைத் திறந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜமைக்காவை விட்டு வடக்கு-வடகிழக்கு திசையில் நகரும் மெலிசா, தற்போது 4-ஆம் நிலை சூறாவளியாக (category 4) வலுப்பெற்றுள்ளது. விசாக்கில் 210 கிமீ (130 மைல்) வேகம். குவாண்டனாமோவில் இருந்து தென்மேற்கு 160 மைல் தொலைவில் உள்ளது. இது கியூபாவின் சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ பகுதிகளை இலக்காகக் கொண்டுள்ளது. 4 மீட்டர் உயர சூறாவளி ஓட்டம், வெள்ளம், நிலச்சரிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கியூபா அதிபர் மிகுவல் டயாஸ்-கானெல், 7.35 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். “நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள்” என அவர் அறிவுறுத்தி உள்ளார். புயல் கியூபாவில் இன்று இரவு அல்லது அதிகாலை தாக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் பஹாமாஸ், பெர்மியூடாவை நோக்கி செல்லும்.
உலக வானிலை அமைப்பு (WMO) இதை “நூற்றாண்டின் மிக் வலிமையான புயல்” என விவரித்துள்ளது. 2025-இல் ஐந்து புயல்களில் மூன்றாவது 5-ஆம் நிலை புயல் இது. கனமழை, வெள்ளம், நோய் பரவல், மனநல பாதிப்புகள் போன்றவை ஏற்படும் என எச்சரிக்கை. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி அளிக்க தயாராக உள்ளன.
இதையும் படிங்க: அதிரடி திருப்பம்... கை, கால்களைக் கட்டி 17 வயது சிறுவன் கொடூர கொலை... கைதானவர் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்..!