ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!
சீனா, வெறும் 100 தொழிலாளர்களை வைத்து, ஐந்தே நாட்களில் 26 மாடி கட்டடத்தை கட்டி முடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சீனாவின் 'பிராட் குரூப்' நிறுவனம் உலகையே வியக்க வைக்கும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. வெறும் 100 தொழிலாளர்களைக் கொண்டு மட்டும், 5 நாட்களில் (120 மணி நேரத்தில்) 26 மாடி உயரமுள்ள கட்டடத்தை கட்டி முடித்து உலக சாதனை படைத்துள்ளது.
வழக்கமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் 26 மாடி கட்டடம் ஒன்றை கட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் சீனா இந்த நேரத்தை வெறும் 5 நாட்களாகக் குறைத்து உலக பொறியியல் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த அதிசயக் கட்டடம் 'ஜிங்டு ஹோலன் பில்டிங்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 1.5 லட்சம் சதுர அடி. 208 வீடுகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சோபா, கட்டில் உள்ளிட்ட முழு பர்னிச்சர்களும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. 4 அடுக்கு கண்ணாடி ஜன்னல்கள் சத்தம் மற்றும் வெப்பத்தை உள்ளே வரவிடாதவாறு பாதுகாப்பு அளிக்கின்றன.
இதையும் படிங்க: நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!
இந்த சாதனைக்கு முக்கியக் காரணம் 'ப்ரீ-பேப்ரிகேட்டட்' (முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட) கட்டுமான முறை. தொழிற்சாலையிலேயே சுவர்கள், தூண்கள், அறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் 'பி-கோர்' எனப்படும் சிறப்பு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன. பின்னர் அசுர வேக கிரேன்கள் மூலம் இந்த பாகங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, நட்-போல்ட் முறையில் இணைக்கப்பட்டன. இந்த கட்டடத்தில் கான்கிரீட் அறவே பயன்படுத்தப்படவில்லை.
இந்தக் கட்டடம் பாரம்பரிய சிமென்ட் கட்டடங்களை விட 10 மடங்கு எடை குறைவானது. மிக மோசமான நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வலிமை கொண்டது என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சாதனை சீனாவின் அதிநவீன கட்டுமான தொழில்நுட்பத்தின் வலிமையை உலகுக்கு நிரூபித்துள்ளது. வேகம், துல்லியம் மற்றும் செலவு குறைப்பு ஆகியவற்றில் சீனா முன்னிலை வகிப்பதை இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பலவும் இந்த முறையை பின்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றன.
சீனாவின் இந்த சாதனை கட்டுமானத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என பொறியியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மொத்தம் 42 விமானங்கள் க்ளோஸ்! ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு பெரிய நஷ்டம்!