×
 

சுரங்கத்தில் கோர விபத்து... கொத்து கொத்தாய் மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்... 40 பேர் பலி...!

காங்கோவில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தென்கிழக்கு காங்கோவில் உள்ள செம்பு மற்றும் கோபால்ட் சுரங்கத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் அன்பில் புதைந்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மின்சார வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோபால்ட் கனிமத்தை சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. மத்திய ஆப்பிரிக்க நாட்டில் உற்பத்தியில் 80% சீன நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

லுவாலாபா மாகாணத்தின் முலோண்டோவில் உள்ள கலண்டோ சுரங்கத்தில் உள்ள பாலம் சனிக்கிழமை இடிந்து விழுந்ததாக மாகாண உள்துறை அமைச்சர் ராய் கவும்பா மயோண்டே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புரட்டி எடுக்கும் கனமழை... காரைக்காலை அடுத்து இந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை...!

திடீரென சத்தம் கேட்டதால் பதற்றம் அடைந்த தொழிலாளர்கள் தப்பிப்பதற்காக பாலத்தின் மீது வேகமாக ஓடியுள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக வாழும் சரிந்து விழுந்தது ஒருவர் மேல் ஒருவராக மண்ணில் புதைந்தனர். இந்த கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பிரதான பாலம் சேதமடைந்தது எடுத்து தற்காலிக பாலம் அவிக்கப்பட்டுள்ளது. அதன் மீது அளவுக்கு அதிகமான தொழிலாளர்கள் திடீரென ஓடியதே விபத்துக்கான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனமழை மற்றும் நிலச்சரிவுக்கான அபாயம் இருப்பதாக சுரங்கத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சட்டவிரோதமாக சுரங்கப் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் தொழிலாளர்களை சுரங்கத்திற்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. 

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சட்டவிரோத கோபால்ட் சுரங்கங்களில் 200,000 க்கும் மேற்பட்டோர் வேலை செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி குண்டு வெடிப்பில் அதிரடி திருப்பம்... மாஸ்டர் பிளான் போட்ட முக்கிய நபரைத் தட்டித் தூக்கிய NIA ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share