×
 

வரலாறு படிங்க விஜய்... ஏதோ தியாகி போல! சிபிஎம் சண்முகம் விளாசல்

விஜய் வரலாற்றை படிக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார். 

அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் விஜய் உரையாற்றினார். இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய் தனது அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், வரலாற்றின் திருப்புமுனையாக அலைகடலென மக்கள் குவிந்தனர். வியந்து பார்க்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடாமல் போனது. திருச்சியை தொடர்ந்து அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரை நிகழ்த்தினார்.

விஜயை காணும் பூரிப்பில் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர். விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தின்போது, அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என விஜய் பேசி இருந்தார். அதற்கு சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். விஜய் ஏதோ தியாகம் செய்வதை போல பேசுகிறார் என்று கூறினார்.

இதையும் படிங்க: மறுபடியுமா! விஜய் விட நயன்தாரா வந்தா கூட்டம் இன்னும் அள்ளும்… சீமான் செம்ம கலாய்

தங்களது சொத்துகளை கூட மக்களுக்கு அர்பணித்தவர்கள் தான் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என தெரிவித்தார். மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் என சண்முகம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கூட்டம் வந்துட்டா ஆட்சி மாறிடுமா? விஜய் பிரச்சாரத்தை விளாசிய திருமா.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share