×
 

டெக்சாஸை ஆட்டம் காண வைத்த பேய் மழை, வெள்ளம்.. எகிறும் பலி எண்ணிக்கை..! தவிக்கும் மக்கள்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த பருவ மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு மத்திய டெக்ஸாஸ் மாகாணத்தில் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே இடி மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றுடன் புயலும் வீசி வரும் நிலையில், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக குவாடாலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு நகரத்தில் புகுந்ததால் பலர்  வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஐ தாண்டியுள்ளது. தற்போது 78 பேர் வெள்ளத்தால் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே டெக்சாஸில் கோடைகால முகாமிற்கு சென்றிருந்த 700 மாணவிகளில், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் மாயமாகியுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய மஸ்க்! புலம்பித் தவிக்கும் ட்ரம்ப்.. மூன்றாவது கட்சி சறுக்குமா? சாதிக்குமா?

இந்த தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் வெள்ளம் இதுவரை கண்டிராத பேரழிவு என வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள், தங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுவரை 900க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகொப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் சிக்கி நிற்பவர்கள், முகாம்களில் பரிதவித்து நிற்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான கெர் கவுண்டியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சான் ஆன்டோனியோவில் 30 செ.மீ. வரை மழை பெய்ததாகவும், குவாடலூப் ஆற்றில் நீர்மட்டம் 26 முதல் 30 அடி வரை உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த பேரழிவை பயங்கரமான சம்பவமாக விவரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும் அதிபர் டிரம்ப், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்ட நிலையில், அவர் வரும் வெள்ளிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதேபோல் டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் இதனை “அசாதாரண பேரழிவு” எனக் குறிப்பிட்டு, மீட்பு பணிகள் தொடரும் என அறிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போருக்கு பின் இதுவே முதன்முறை.. மக்கள் மத்தியில் தோன்றிய காமெனி..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share