இனிமே போரில் இவங்கதான் வருவாங்க..! மனிதரோபாட்களை விரைவில் களமிறக்கும் டிஆர்டிஓ..!
இனிவரும் காலத்தில் போரில் ஈடுபடுவதற்காக மனித உருவில் ரோபாட்கள் எனப்படும் ‘ஹியூமனாய்ட்’களை உருவாக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஈடுபட்டுள்ளது.
இனிவரும் காலத்தில் போரில் ஈடுபடுவதற்காக மனித உருவில் ரோபாட்கள் எனப்படும் ‘ஹியூமனாய்ட்’களை உருவாக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஈடுபட்டுள்ளது. மிகவும் ஆபத்தான பகுதிகளில் ராணுவ வீரர்களை பாதுகாப்புக்கு நிறுத்தும்போது எதிரிகளால் தேவையற்ற உயிரிழப்புகளை சந்திக்க நேர்கிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, ராணுவ வீரர்களின் உயிரைக் காக்கும் பொருட்டு ஆபத்தான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இந்த ஹியூமனாய்ட் ரோபாட்களை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மனிதர்களின் உத்தரவுப்படி முக்கியமான இடங்களில் பாதுகாப்புப் பணி, துப்பாக்கியால் சுட்டுதாக்குதல் நடத்துதல், தொலைநோக்கியால் பார்த்தால், சென்சார், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த ஹியூமனாய்ட் உருவாக்கப்பட்டு வருகிறது. வீரர்களின் பாதுகாப்பான சூழலுக்கும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வீரர்களின் கண்காணிப்பில் ஹியூமனாய்ட் பாதுகாப்பில் ஈடுபட உருவாக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இனி வாலாட்ட முடியாது! கடலுக்கு அடியில் கண்ணிவெடி? மாஸ் காட்டிய இந்திய கடற்படை..!
இந்த ஹியூமனாய்ட் ரோபாட்களை உருவாக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரோபாட்களின் கீழ்பகுதி மற்றும் மேற்பகுதி உடல்களில் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. ரோபாட்களை வைத்து நடத்தப்பட்ட உள்ளீட்டு பரிசோதனைகள், ஆய்வுகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஆபத்தான பனிமலைப்பகுதி, பனிச்சிகரங்கள், காடுகள், பாலைவனங்கள் ஆகியவற்றில் ஹியூமனாய்ட் ரோபாட்களை ஈடுபடுத்த முடியும். அதிகாரிகள் அளிக்கும் உத்தரவுகளை ஏற்று உடனுக்குடன் தனது செயல்பாடுகளை மாற்றவும் ரோபாட்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
இந்த ஹியூமனாய்ட் ரோபாட்களில் 3 முக்கிய பிரிவுகள் உள்ளன. மனித தசைகள் நகர்வது போன்று அதேபோன்று உலோகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. தன்னைச் சுற்றியிருக்கும் சூழல்கள், மனிதர்கள், பொருட்கள், தாக்குதல்களை உணரும் வகையில் சென்சார் அமைக்கப்பட்டுள்ளது. ரோபாட்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து அடுத்தடுத்த செயல்களை செய்யத் தூண்டும் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கியமானவையாகும்.
இந்த ஹியூமனாய்ட் ரோபாட்களில் மிகப்பெரிய சவாலாக இருப்பது, குறிப்பிட்ட இலக்குகளை, பணிகளை சிக்கலின்றி, எளிதாக முடிக்குமா என்பதுதான். இதற்கு சூழலுக்கு ஏற்பட திட்டங்களை செயல்படுத்துதல், புள்ளிவிவரங்களை அதிவேகமாக ஆய்வு செய்தல், நடுநிலையுடன் இருத்தல் அவசியமாகும். கைரன் அகேலோ தலைமையிலான விஞ்ஞானிகள் குழுதான் இந்த ரோபாட்டை உருவாக்கி வருகிறார்கள். 2027ம் ஆண்டுதான் ரோபாட் குறித்த பணிகள் முடியும்.
டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில் “ 4 கால்கள் கொண்ட ஹியூமனாய்ட் அல்லது 2 கால்கள் ஹியூமனாய்ட் ரோபாட்களை உருவாக்குகிறோம். இந்த ரோபாட்களை பாதுகாப்பு, கண்காணிப்பு, மருத்துவத்துறை, உள்நாட்டு உதவிகள், விண்வெளிதுறை, உற்பத்தித் துறைக்கு பயன்படுத்த முடியும். பாதுகாப்புத்துறைக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஹியூமனாய்ட் ரோபாட்களால் மனிதர்களின் உத்தரவுகளை கேட்டு அதற்கு ஏற்றார்போல் செயல்பட முடியும். ஒரு பொருளை தள்ளுதல், இழுத்தல், இறுக்கிப் பிடித்தல், திரும்புதல், ஆபத்தான பொருட்களை பாதுகாப்பாகக் கையாளுதல், சுரங்கங்களில் பணியாற்றுதல் ஆகியவற்றுக்கும் ஹியூமனாய்ட் ரோபாட்கள் பயன்படுத்தப்பட உள்ளன” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாக். வான்வெளி மூடல்.. புதிய வழிதடத்தைப் பிடித்து செலவு, நேரத்தைக் குறைத்த இந்திய விமானங்கள்..!