×
 

இந்த வருஷமே கல்யாணம் பண்ணா ரூ.12.5 லட்சம் பரிசு!! தொழிலதிபர் அறிவிப்பால் ஊழியர்கள் கொண்டாட்டம்!

து​பாயைச் சேர்ந்த தொழில​திபர் கலாப் அல் ஹப்​தூர், ஊழியர்​களுக்கு திருமண பரிசாக ரூ.12.5 லட்​சம் வழங்​கப்​படும் என்று அறி​வித்​துள்​ளார்.

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. துபாயைச் சேர்ந்த புகழ்பெற்ற தொழிலதிபரும் அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவருமான கலாப் அல் ஹப்தூர், தனது நிறுவனத்தில் பணியாற்றும் எமிராட்டி (ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள்) இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திருமண பரிசாக 50,000 திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12.5 லட்சம்) வழங்குவதாக அறிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கலாப் அல் ஹப்தூர் கூறியதாவது: "திருமணம் செய்வதும் குடும்பம் உருவாக்குவதும் தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அவை சமூக மற்றும் தேசிய பொறுப்புகள். குடும்பங்களால் தான் தேசங்கள் கட்டமைக்கப்படுகின்றன. எங்கள் அரசு இளைஞர்களுக்கு ஆதரவு அளித்தாலும், நடைமுறை உதவிகள் தேவை. அதனால் இந்த ஆண்டு திருமணம் செய்யும் ஒவ்வொரு எமிராட்டி ஊழியருக்கும் 50,000 திர்ஹாம் வழங்குகிறேன்."

மேலும், "குடும்பமே சமூகத்தின் அஸ்திவாரம். குழந்தைகள் தேசத்தின் எதிர்கால முதலீடு. இந்த நிதி உதவி பெற்று திருமணம் செய்த பிறகு, ஒரு குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த தொகை இரட்டிப்பாக்கப்படும்" என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: மிஸ் பண்ணிடாதீங்க..!! பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்கலையா..?? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!!

இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை "குடும்பத்தை ஊக்குவிக்கும் சிறந்த முயற்சி" என்று பாராட்டி வருகின்றனர்.

கலாப் அல் ஹப்தூர் யார்? அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவராக இருக்கும் அவர், கமர்ஷியல் பேங்க் ஆஃப் துபாய் தலைவராகவும், பெடரல் நேஷனல் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1970-ல் தொடங்கப்பட்ட அவரது குழுமம் ஹோட்டல், வாகனத் துறை, ரியல் எஸ்டேட், கல்வி, பதிப்பகம் உள்ளிட்ட பல துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த அறிவிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்ப வாழ்க்கையை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு புதிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பல தொழிலதிபர்கள் இதைப் போன்று பின்பற்றலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் "இதுபோன்ற தலைவர்கள் அதிகம் வேண்டும்" என்ற கருத்துகள் பரவலாக பகிரப்படுகின்றன. கலாப் அல் ஹப்தூரின் இந்த முடிவு இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அஜித்பவாரின் மனைவிக்கு அமைச்சரவையில் இடம்? அமைச்சரகாகிறார் சுனேத்ரா பவார்? மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share