×
 

இலங்கையை புரட்டிப் போட்ட 'டிட்வா' புயல் - மழை வெள்ளம், மண் சரிவில் சிக்கி 40 பேர் பலி...! 

இலங்கையை உலுக்கி எடுத்து வரும் டிட்வா புயலால் இதுவரை 40 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தொடரும் கனமழை  மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை, மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இலங்கைக்கு தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது புயலாக மாறி உள்ளது. இதன் காரணமாக  இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இலங்கை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இலங்கை மட்டக்களப்பை வவுனியா, திரிகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் ஏராளமான வீடுகளின் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தவர்களை  ஹெலிகாப்டர் மூலம் இலங்கை அரசு மீட்டு வருகிறது. மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் படகு மூலமும்  மீட்பு பணி நடைபெற்று வருகிறது. சீரற்ற வானிலை காரணமாக 1,729 குடும்பங்களைச் சேர்ந்த 5,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில்  உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அனர்த்தங்களால் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 381 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. ஐந்து பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உறவினர்களின் வீடுகளில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

இதையும் படிங்க: #BREAKING வேகத்தை அதிகரித்த ‘டிட்வா’...!! தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து... எங்கெல்லாம் ரெட், ஆரஞ்சு அலர்ட்?

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், கண்டி, கங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளனர். இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவுகள் காரணமாக 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏராளமான மக்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை தீவிரம் அடையும் என்பதால்  மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென இலங்கை அரசு அறிவித்துள்ளது. மழை மற்றும் வெள்ள பாதிப்பு இதுவரை முழுமையான தகவல் கிடைக்கப்பெறவில்லை. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் இருளில் மூழ்கி உள்ளனர். இலங்கையில் தொடரும் கனமழையால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, அத்தியாச பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நிம்மதி... நாகை மீனவர்கள் 31 பேர் விடுதலை... இலங்கை நீதிமன்றம் வைத்த செக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share