×
 

குழந்தையை வைத்து கும்மி அடிக்கும் எலன் மஸ்க்..! ஓவல் அறையில் அட்ராசிட்டி..! குமுறும் நிஜ அமெரிக்கர்கள்..

உலக கோடீஸ்வரர்களில் நம்பர்  ஒன் நபரான எலன் மஸ்க் தற்போது அமெரிக்காவின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையில் வைத்து ஆட்டிப் படைக்கிறார் என்ற செய்தி மெல்ல கசிய தொடங்கியுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் நிர்வாகத்தில் ஏராளமான வீண் செலவுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக புகார் எழுந்தன, அதாவது சுமார் 6 லட்சம் கோடி அளவிற்கு வீண் செலவுகள் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருவதாக புள்ளிவிவரக் கணக்குகள் தெரிவித்தன. இதன் அடிப்படையில் இந்த செலவை கட்டுப்படுத்தி உபயோகமுள்ள விஷயத்திற்கு இந்த பணத்தை செலவழிக்கலாம் என்று முடிவெடுத்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்ப் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வந்தார்.

இதற்காக புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார் 
 அந்த வகையில் டோஜ்(DOGE )என்னும் அமைப்பு அதன் தலைவராக தொழிலதிபர்  எலோன் மஸ்க் மற்றும் அமெரிக்க தமிழரான விவேக் ராமசாமி ஆகியோர் செயல்படுவர் என டிரம்ப் வெற்றி பெற்றவுடன் அறிவித்தார். ஆனால் விவேக் ராமசாமியை, எலோன் மஸ்க் மெதுவாக கழற்றி விட்டு விட்டார். தற்போது விவேக் ஓகியோ மகான கவர்னராக  தேர்வு செய்யப்படலாம் என்று கருத்து நிலவுகிறது.

இதையும் படிங்க: பேப்பர் சரிவராது! மீண்டும் ‘பிளாஸ்டிக் ஸ்ட்ரா’: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் யுடர்ன் உத்தரவு

டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து நடைபெறும் ஒவ்வொரு இரவு விருந்துகள் மற்றும் கூட்டங்களில் பெரும்பாலும் எலன் மஸ்க் தனது இளைய மகனான Xi எக்ஸ் உடன் தான் வருகிறார். அதிலும் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்க ஜனாதிபதியின் பிரத்தியேக அதிகாரப்பூர்வ அறையான ஓவல் அறையில் எலன் மஸ்க் செய்து வரும் அட்ராசிட்டிகளை கண்டு நிஜமான அமெரிக்கர்கள் தற்போது கொதித்து எழுந்துள்ளனர்.

உண்மையில் எலன் மஸ்க் அமெரிக்கரே அல்ல அவர் சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த நபர் ஆவார், கனடாவை பூர்விகமாகக் கொண்ட தாயும் தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட தந்தைக்கும் பிறந்து தென்னாப்பிரிக்காவிலேயே வளர்ந்து பின்னர் அமெரிக்காவில் குடி ஏறியவர் ஆவார்.

 

நிலைமை இப்படி இருக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற உழைத்தார் என்பதற்காக அளவுக்கு அதிகமாக எலன் மஸ்க் ஆட்டம் போட்டு வருகிறார் என்ற கருத்தும் நிலவுகிறது குறிப்பாக தனது இளைய மகனான xi யுடன் சேர்ந்து அமெரிக்க அரசின் மாண்பை சிதைத்து வருகிறார் எலன் மஸ்க் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது 

நேற்று DOGE தொடர்பான முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் அதிகாரப்பூர்வ நிகழ்வு நடைபெற்றது அப்போது பூட்டிய அறைக்குள் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அந்த நேரத்தில் ஒரு மிகவும் சீரியஸான ஒரு கட்டத்தில் எலன் மஸ்க் தனது சிறிய குழந்தையை கையில் வைத்துக் கொண்டு தோளில் சுமந்து கொண்டும் தலையின் மீது அமர்த்திக் கொண்டும் மிகவும் கேஷுவலாக நடந்து கொண்டது அதிருப்தியை ஏற்படுத்தியது. இது பத்திரிகையாளர்களை மட்டுமல்ல அங்கு அமர்ந்து கொண்டிருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் முகம் சுளிக்கும் அளவிற்கு போனது.

ஒரு கட்டத்தில் மிக முக்கியமான அறிவிப்புகள் குறித்த விஷயங்களை எலன்மஸ்க் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் போது அவர் சொல்லும் வார்த்தைகளை அவரது குட்டி மகன் மீண்டும் அதை ரிப்பீட் செய்து கொண்டே இருந்தார் இது மிக முக்கியமான அரசு தொடர்பான முடிவு எடுக்கும் அல்லது முடிவெடுத்த விஷயத்தை அறிவிக்கும் போது  விளையாட்டுத்தனமான நிகழ்வாக மாறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதற்காக தங்களது குழந்தைகளை அரசின் அதிகாரப்பூர்வ விஷயங்களில் உடன் வைத்து ஈடுபடுவது சரியான முறை அல்ல என்ற கருத்தும் நிலவுகிறது

இதையும் படிங்க: ஹமாசுக்கு நரகம் காத்திருக்கு..பிப்.15-க்குள் விடுவிக்காவிட்டால்? ட்ரம்ப் எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share