×
 

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு..! பயிர் கடன் தள்ளுபடியில் பல குளறுபடிகள்... EPS எதிர்ப்பு..!!

பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதல்வர் விஜய்யை எடப்பாடி பழனிச்சாமி சாடியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில், சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது. 2021இல் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சுமார் ரூ.2,044 கோடி மட்டுமே. இது விவசாய சங்கங்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், “தேர்தல் உத்தரவாதத்துக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியது. 

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறிய நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 100% தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 50,000 ரூபாய் வரை தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

சுமை தூக்கும் ஒட்டகம் பாரம் தாங்காமல் உட்காரும்போது, அதை ஏமாற்றுவதற்காக ஒட்டகத்தின் முதுகில் இருந்து சிறு மூட்டை ஒன்றை அதன் கண்முன்னால் முதலாளி இறக்கி வைத்தவுடன் அந்த ஒட்டகம் எழுந்து நடக்கும்.,அதுபோல் விவசாயிகளின் சுமையைக் குறைப்பதாக ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் ஏமாறமாட்டார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..? மனதை வெல்ல முடியாத தலைமை... தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தும் சி. விஜயபாஸ்கர்..!

தமிழக குறு, சிறு விவசாயிகள் ஒரே சமூகப் பொருளாதார நிலையில் வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்களிடையே பெரிய அளவு பொருளாதார ஏற்றத் தாழ்வு கிடையாது என்றும் தெரிவித்தார். பயிரிடப்படும் பயிர்களுக்கு ஏற்றார்போல் கடன் அளவும் வேறுபடும் என்பதை TVK அரசு உணரவில்லை என்றும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று, துக்ளக் பாணியில் ஆட்சி நடத்துவதை இந்த அரசு கைவிட வேண்டும். 'உழவன் சேற்றில் கால்வைத்தால் தான் எத்தனை பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் சோற்றில் கை வைக்க முடியும்' என்பதை அனுபவமற்ற முதலமைச்சருக்கு தெரிவிக்க கடமைப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share