×
 

சட்டசபை 3 ஆம் நாள் கூட்டம்... இபிஎஸ் வாக்குவாதம்..! அதிமுகவினர் வெளிநடப்பு..!

விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்குச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கியது.

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரவி தனது உரையை நிகழ்த்துவார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது ஏமாற்றத்தில் தான் முடிந்தது. இரண்டாம் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்ற நிலையில் கேள்வி நேரம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரம் முடிந்த நிலையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முன்னதாகவே அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்றும் தற்போது நேரம் வழங்க முடியாது எனக் கூறிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் வாக்குவாதம் செய்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் NDA கூட்டணிக்கு எடப்பாடி தலைமை… ஊழல் மட்டுமே திமுக சாதனை..! EPS, பியூஷ் கோயல் கூட்டாக பேட்டி..!

சட்டப்பேரவையில் அதிமுகவினர் கூச்சலிட்டனர். சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பிரச்சினைகள் குறித்த நாளை பேசிக்கொள்ளலாம் என்றும் தற்போது நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். இதனை கேட்காத அதிமுகவினர் கூச்சலிட்டனர். பிறகு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பின. விவசாயிகள் குறித்து பேச மறுப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். சர்வாதிகாரப் போக்கை கண்டிப்பதாக கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க: EPS இல்லத்தில் அரசியல் விருந்து..! பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைகள் பங்கேற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share