×
 

EPS இல்லத்தில் அரசியல் விருந்து..! பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைகள் பங்கேற்பு..!

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் முக்கிய அரசியல் மையமாக மாறியது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக உயர்மட்டத் தலைவர்களுக்கு இன்று காலை எடப்பாடியார் தனது இல்லத்தில் சிறப்பான விருந்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். வெறும் உபசரிப்பாகத் தொடங்கிய இந்தச் சந்திப்பு, தற்போது 2026 தேர்தலுக்கான முக்கிய வியூகங்களை வகுக்கும் களமாக உருவெடுத்தது.

இந்தச் சந்திப்பில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ள நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாளை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரள உள்ளனர்.

அதற்கு முன்னதாக, இன்று நடக்கும் இந்த விருந்து மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விவகாரங்களில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படலாம் என கூறப்பட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கக்கூடிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிலத்திற்கு பியூஸ் கோயல் வருகை தந்தார்.

இதையும் படிங்க: வாங்க..! சரித்திர வெற்றி படைப்போம்...! இபிஎஸ்க்கு நன்றி சொன்ன TTV தினகரன்..!

நட்புணர்வை மேம்படுத்தக் கூடிய வகையில் பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. பியூஷ் கோயலுக்கு எடப்பாடி பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்று சிறப்பித்தார். இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், H. ராஜா, L. முருகன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வாழ்த்து சொன்ன இபிஎஸ்... கண்டுக்காத TTV..! பெயரைக் கூட குறிப்பிடாமல் கடந்து சென்ற சம்பவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share