சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு.. சர்வாதிகார அரசு..! இபிஎஸ் கடும் கண்டனம்..!
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார்.
விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் வாக்குவாதம் செய்தார். சட்டப்பேரவையில் அதிமுகவினர் கூச்சலிட்டனர். சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பிரச்சினைகள் குறித்த நாளை பேசிக்கொள்ளலாம் என்றும் தற்போது நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். இதனை கேட்காத அதிமுகவினர் கூச்சலிட்டனர்.
பிறகு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பின. விவசாயிகள் குறித்து பேச மறுப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். சர்வாதிகாரப் போக்கை கண்டிப்பதாக கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, விவசாயிகளின் முக்கிய பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் 5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல் படுகிறது என்றும் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டசபை 3 ஆம் நாள் கூட்டம்... இபிஎஸ் வாக்குவாதம்..! அதிமுகவினர் வெளிநடப்பு..!
ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ஜீரோ ஹவரில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும் என்றும் முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது என்றும் தெரிவித்தார். ஆறு மாதமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் NDA கூட்டணிக்கு எடப்பாடி தலைமை… ஊழல் மட்டுமே திமுக சாதனை..! EPS, பியூஷ் கோயல் கூட்டாக பேட்டி..!