இப்போ தும்முனா சரியா இருக்கும்!! மோடி வரும் நேரம் மெட்ரோ சர்ச்சையை கிளப்பியது ஏன்?
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக கூறி, திமுக தனது கூட்டணி கட்சிகள் மூலம் மோடி வரும் நாளில் போராட்டம் நடத்தியது.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் திருப்பி அனுப்பியதை வைத்து தி.மு.க அரசு “மத்திய அரசு பழிவாங்குகிறது” என்று பிரச்சாரம் செய்து வருகிறது.
ஆனால் மத்திய அரசு அனுப்பிய முழுக் கடிதத்தையும் வெளியிடாமல், மக்கள் தொகை பற்றிய ஒரு பகுதியை மட்டும் திரித்து பரப்புவதாக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் முழுக் கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு திருப்பி அனுப்பிய கடிதத்தில் என்ன இருக்கிறது? கடந்த நவம்பர் 14 அன்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் (MoHUA) தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் பின்வரும் காரணங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன:
இதையும் படிங்க: நானே வரேன்... திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு... விசாரணைக்கு நேரடியாக சென்ற நீதிபதி...!
- 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவை (15.84 லட்சம்), மதுரை (15 லட்சம்) ஆகிய நகரங்களின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் குறைவு. 2017 மெட்ரோ ரயில் கொள்கைப்படி 20 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருந்தால்தான் மெட்ரோ ரயில் திட்டத்தை பரிசீலிக்க முடியும்.
- தற்போதைய பொது போக்குவரத்து பயண நேரத்துடன் ஒப்பிடுகையில் மெட்ரோ ரயில் பயண நேரத்தில் பெரிய சேமிப்பு இல்லை என்பதால் மக்கள் மெட்ரோவுக்கு மாற மாட்டார்கள்.
- போதிய இட வசதி இல்லாததால் பெரிய அளவில் தனியார் கட்டடங்கள், சொத்துகளை இடிக்க வேண்டி வரும்; இதனால் செலவு மிக அதிகமாகும்.
- இதற்கு மாற்றாக இரு நகரங்களிலும் தனி பாதையில் பஸ்கள் மட்டும் இயக்கும் BRTS (Bus Rapid Transit System) திட்டத்தை செயல்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
தி.மு.க அரசு என்ன செய்தது?=மத்திய அரசின் இந்தக் கடிதம் வந்த அதே நாளில் (நவம்பர் 14) தி.மு.க அரசு அதை வெளியிடவில்லை. பிரதமர் மோடி கோவை வந்த நவம்பர் 18 அன்று மட்டும் தான் “மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டது” என்று தகவலை கசிய விட்டது.
அதுவும் மக்கள் தொகை பற்றிய ஒரு வரியை மட்டும் எடுத்து “பா.ஜ.க பழிவாங்குகிறது” என்று கூட்டணிக் கட்சிகள் மூலம் போராட்டம் நடத்தியது. முழுக் கடிதத்தையும் மக்கள் பார்க்கக் கூடாது என்றே திட்டமிட்டு மறைத்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலையின் பதில்: தனது எக்ஸ் பக்கத்தில் முழுக் கடிதத்தையும் வெளியிட்ட அண்ணாமலை, “தி.மு.க அரசு வேண்டுமென்றே தவறான, முழுமையடையாத திட்ட அறிக்கையை அனுப்பி, அதை மத்திய அரசு நிராகரித்ததாக அரசியல் செய்கிறது. முழுக் கடிதத்தை படித்தால் எல்லாம் அம்பலமாகிவிடும். இனியாவது மத்திய அரசை குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு, சரியான திட்ட அறிக்கையை விரைவில் மீண்டும் அனுப்புங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நிலை: கடந்த ஆண்டு முதல் முறையாக திட்ட அறிக்கை அனுப்பப்பட்டபோது, கூடுதல் ஆவணங்கள் தேவை என்று மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதன்பிறகு திருத்தப்பட்ட அறிக்கையை 2024 நவம்பரில் அனுப்பியது. ஆனால் அதிலும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பையே அடிப்படையாக வைத்திருந்ததால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய நிலை: தி.மு.க அரசு இதுவரை முழுக் கடிதத்தையும் வெளியிடவில்லை. அதேநேரம் “மத்திய அரசு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை புறக்கணிக்கிறது” என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் அண்ணாமலை வெளியிட்ட முழுக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி, தி.மு.க அரசின் பிரச்சாரத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சைலன்ஸ்!! டெல்லியில் நடந்த காங்., சிறப்பு கூட்டம்!! மாநில தலைவர்களின் வாய்க்கு பூட்டு!