×
 

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது திடீர் தாக்குதல்! ஒருவர் பலி... 3 பேர் காயம்!

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள விவகாரம் தொடர்பாக ஓமன் மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் வணிகக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயமடைந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரை அருகே அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கெஷ்ம் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் சம்பவத்தின் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கெஷ்ம் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் முந்தைய இரவும் பல தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ளது! டிரம்பின் அதிரடி அறிவிப்பால் ஈரானுக்கு புதிய நெருக்கடி?

உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச அளவில் பெருமளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஏற்படும் சிறிய பதற்றமும் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.

இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள விவகாரம் தொடர்பாக ஓமன் மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்னதாகவே கப்பல் தாக்கப்பட்ட சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான மோதல் காரணமாக கடல்வழிப் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விநியோகத்தில் அச்சம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் கப்பல் மீது நடைபெற்றுள்ள தாக்குதல், ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் பிராந்திய நிலைமையை மேலும் மோசமாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் தாக்கம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரான் என்ற நாடே மிஞ்சாது! அடுத்த தாக்குதல் மிக மோசமாக இருக்கும்? டிரம்ப் விடுத்த பயங்கர வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share