ஈரான் என்ற நாடே மிஞ்சாது! அடுத்த தாக்குதல் மிக மோசமாக இருக்கும்? டிரம்ப் விடுத்த பயங்கர வார்னிங்!
ஈரான் மீண்டும் பதிலடி கொடுக்க முயன்றால், இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களை விட பல மடங்கு கடுமையான தாக்குதல் காத்திருப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான ராணுவ பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தினால் அதைவிட மிகக் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டிரம்பின் இந்த கருத்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மத்தியப்படை தலைமையகத்தின் தகவலின்படி, செப்டம்பர் 1-ந்தேதி ஈரானின் சில ராணுவ நிலைகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் தளங்கள், கடல்சார் தளவாடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள் உள்ளிட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்க ராணுவத்தினரை குறிவைத்து ஈரான் மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பணியில் இருப்பதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனடாவிலிருந்து எதுவுமே வேண்டாம்! இனி சலுகை இல்லை! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
இதற்கிடையே, டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே உள்ள ஈரான் தளங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை அமைக்க முயன்றதாகவும், அவற்றில் சில அகற்றப்பட்டதாக அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி ஈரான் ஏவியதாக கூறப்படும் 8 ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் மீண்டும் பதிலடி கொடுக்க முயன்றால், இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களை விட பல மடங்கு கடுமையான தாக்குதல் காத்திருப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். அவரது இந்த கருத்து மத்திய கிழக்கில் போர் மேலும் விரிவடையுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் தெற்கு ஈரானில் திருமணம் நடைபெற்ற குடியிருப்பு பகுதியில் அமெரிக்க ஏவுகணை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில், ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்கா-ஈரான் மோதல் பொதுமக்களையும் பாதிக்கும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரானுடன் சமரசமா? போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!