இறுதிக்கட்டத்தை எட்டிய ஒப்பந்தம்!! இந்தியாவுக்கு குட் நியூஸ்! ஐரோப்பிய யூனியன் தலைவர் தகவல்!
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான மிக பிரமாண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக, ஐரோப்பிய யூனியன் தலைவர் உ ர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மாநாடு ஜனவரி 23 வரை நீடிக்கிறது. 60க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாநாட்டில் ஐரோப்பிய யூனியன் (EU) கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முக்கிய உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடந்து வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement - FTA) தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வேலைகள் உள்ளன. ஆனால் நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் விளிம்பில் உள்ளோம். சிலர் இதை 'அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்' (mother of all deals) என்று அழைக்கின்றனர். இது 200 கோடி மக்களைக் கொண்ட பிரமாண்ட சந்தையை உருவாக்கும். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25 சதவீதத்தை உள்ளடக்கியது" என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவுடன் முதல் முன்னுரிமை (first mover advantage) வழங்கும் என்றும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் வர்த்தக கூட்டாளிகளை பன்முகப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார். டாவோஸ் மாநாட்டுக்குப் பிறகு, வரும் வார இறுதியில் இந்தியா செல்ல உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: ட்ரம்ப் சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு!! அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!! அதிபர் போட்ட ட்வீட்!
ஐரோப்பிய யூனியன் என்பது 27 ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட அமைப்பு. 1993-இல் உருவாக்கப்பட்ட இது, வர்த்தகம், பாதுகாப்பு, சட்டம், வெளியுறவு கொள்கைகளில் இணைந்து செயல்படுகிறது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் FTA பேச்சுவார்த்தைகள் 2007-இல் தொடங்கியது. 2013-இல் நிறுத்தப்பட்டு 2022-இல் மீண்டும் தொடங்கியது. இப்போது இறுதிகட்டத்தில் உள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு ஐரோப்பிய சந்தையில் அதிக அணுகல், ஏற்றுமதி வளர்ச்சி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை வழங்கும். ஐரோப்பாவுக்கு இந்தியாவின் வளரும் சந்தை, தொழிலாளர், பொருட்கள் ஆகியவை பயனளிக்கும்.
வரும் ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் 77-ஆவது குடியரசு தின விழாவில் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.
ஜனவரி 25-ஆம் தேதி மூன்று நாள் அரசு முறை பயணமாக வரும் அவர்கள், ஜனவரி 27-ஆம் தேதி இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டுக்கு தலைமை தாங்குவர். இந்த உச்சி மாநாட்டில்தான் FTA இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் உலக வர்த்தகத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கும். இந்தியாவின் வளர்ச்சி வேகத்துடன் ஐரோப்பாவின் தொழில்நுட்ப வலிமை இணைந்தால், உலக பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். டிரம்ப் அரசின் வர்த்தக வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐரோப்பா-இந்தியா ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க: குடியரசு தின விழாவில் கலந்துக்க வாங்க!! நீலகிரி தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு? யார் அந்த இந்திராணி!