ட்ரம்ப் சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு!! அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!! அதிபர் போட்ட ட்வீட்!
சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் விமானம், கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் வேறு விமானத்தில் டிரம்ப் குழுவினர், சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றனர்.
உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) நடத்தும் டாவோஸ் மாநாடு தற்போது சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 60க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 11:30 மணி) முக்கிய உரையாற்ற உள்ளார்.
கிரீன்லாந்து விவகாரம், ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தக வரி அச்சுறுத்தல், ஆர்ட்டிக் பகுதி பாதுகாப்பு, உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில், அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான தளத்திலிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) சிறப்பு விமானத்தில் புறப்பட்டார். விமானம் சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் வானில் பறந்த பிறகு, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பேசிப்பாப்போம்! செட் ஆகலைனா அவ்ளோதான்! கிரின்லாந்தை மிரட்டும் ட்ரம்ப்!!
இதை உணர்ந்த விமானி உடனடியாக சூழலை கட்டுப்படுத்தி, மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, டிரம்பும் அவரது உறுதியான குழுவினரும் மாற்று விமானத்தில் (பேக்-அப் ஏர் ஃபோர்ஸ் ஒன்) மீண்டும் சுவிட்சர்லாந்து நோக்கி புறப்பட்டனர். இதனால் மொத்தம் சுமார் 2 மணி 30 நிமிடங்கள் தாமதமானது. டாவோஸ் மாநாட்டு அமர்வுகளில் டிரம்பின் உரை திட்டமிட்ட நேரத்திற்கு சிறிது தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டிரம்ப் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில், "டாவோஸ் மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கிறது. அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று பதிவிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், "விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பாதுகாப்பு நடைமுறைகளின்படி உடனடியாக தரையிறக்கப்பட்டது. அதிபர் பாதுகாப்புடன் பயணத்தைத் தொடர்ந்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், ஏர் ஃபோர்ஸ் ஒன் போன்ற அதிநவீன ராணுவ விமானத்தில் இத்தகைய கோளாறு அரிதானது. டிரம்பின் டாவோஸ் உரை உலக பொருளாதாரம், புவிசார் அரசியல், வர்த்தக போர் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிரீன்லாந்து விவகாரத்தில் அவர் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பதை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றன.
இதையும் படிங்க: உத்தரவுக்கு காத்திருக்காதீங்க!! அமெரிக்கா அத்துமீறினா சுடுங்க! டென்மார்க் வீரர்களுக்கு பிரதமர் மெட்டே ஆர்டர்!