இந்தியா ஆதரவு எங்களுக்கு தான்!! அமெரிக்காவுடன் மல்லுக்கட்டும் இஸ்ரேல்! நெதன்யாகு தம்பட்டம்!
இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த கூட்டாளிகள் இல்லை என்ற அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் கருத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார்.
ஜெருசலேம்: அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு சக்திவாய்ந்த நட்பு நாடுகள் இல்லை என்ற அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் கருத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார். இந்தியாவிடம் இருந்து இஸ்ரேலுக்கு கிடைக்கும் ஆதரவை சுட்டிக்காட்டி அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய நெதன்யாகு, “இந்தியாவில் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. 140 கோடி மக்கள் வாழும் இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான நண்பர். இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த மிகச் சிறந்த நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்ப்” என்று தெரிவித்தார்.
ஜே.டி. வான்ஸை தான் மதிப்பதாகக் கூறிய நெதன்யாகு, “ஆனால் அவர் சொல்லும் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தமில்லை. இந்தியா போன்ற நண்பர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அமெரிக்காவை சார்ந்திருப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்!! அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு? இஸ்ரேல் பிரதமர் காட்டம்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நீண்ட நாட்களாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்க உதவியை நம்பியிருக்கும் இஸ்ரேல், சர்வதேச அளவில் புதிய நட்பு வட்டங்களை விரிவுபடுத்த முயற்சி எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவுடனான உறவை நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் நீண்டகாலமாக வலுவான ஒத்துழைப்பு நிலவி வருகிறது. குறிப்பாக தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளும் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்கத் துணை அதிபரின் கருத்துக்கு நெதன்யாகு கொடுத்த பதில் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் தனது நட்பு வட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கொடுப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பேட்டி இஸ்ரேல்-இந்திய உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், உலக அரங்கில் புதிய சமன்பாடுகள் உருவாகும் சாத்தியத்தையும் காட்டுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேல் பிரதமரை எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு தெரியும்! லெபனான் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் விளக்கம்!