×
 

ஸ்டீல், ஆட்டொமொபைல் உதிரி, மருந்துகளுக்கு வரிவிலக்கு.. அமெரிக்காவுக்கு சலுகையளிக்க இந்தியா திட்டம்..!

ஸ்டீல், ஆட்டமொபைல் உதரி பாகங்கள், மருந்துப் பொருட்களுக்கு ஜூரோ வரி விதிக்கும் முடிவு குறித்து அமெரிக்காவிடம் மத்திய அரசு தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுடன் பரஸ்பர வரித்திட்டத்தின் படி, ஸ்டீல், ஆட்டமொபைல் உதரி பாகங்கள், மருந்துப் பொருட்களுக்கு ஜூரோ வரி விதிக்கும் முடிவு குறித்து அமெரிக்காவுடன் நடக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசு தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இந்த வகைப் பொருட்களுக்கு இந்தியா சார்பில் ஜூரோ வரிவிதிக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கு இந்த வகைப் பொருட்களை ஏற்றுமதி செய்தாலும் அந்நாட்டு அரசுஇந்தியப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கும்.

இது தவிர்த்து, தொழிற்துறை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு வழக்கமான வரியும் விதிப்பதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் அமெரிக்காவுக்கு வர்த்தகப் பேச்சு நடத்த இந்தியா சார்பில் வர்த்தக அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது அமெரிக்க அதிகாரிகளிடமும் இந்திய சார்பில் இந்தத் திட்டத்தை தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டு இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சும்மா இறங்கி அடிங்க.. இந்தியாவுக்கு ஃபுல் சப்போர்ட்.. ரஷ்யா, ஜப்பான் வரிசையில் அமெரிக்கா..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்கள் நிறுத்தியுள்ள இந்த காலகட்டம் முடிவதற்குள், இரு நாடுகளும் சில துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை நிலவும் சூழலில் க்கு இந்த வாரத்திலேயே சில வர்த்தக ஒப்பந்தங்களை விரைந்து முடிக்கவும் இரு நாட்டு அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர்.  இந்தியா மட்டுமல்ல, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளும் அமெரிக்காவுடன் சமூகமாக வர்த்தக ஒப்பந்தங்களை எட்டும் ஆர்வத்தில் உள்ளன.

இந்திய அரசு தரக் கட்டுப்பாட்டு விதிகளில் இருக்கும் கெடுபிடிகளை, சிக்கல்களை தீர்க்குமாறு அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இந்தியாவும் தரக் கட்டுப்பாட்டு விதிகளை மறுஆய்வு செய்து, தளர்த்தவும் சம்மதித்துள்ளது. குறிப்பாக மின்னணு சாதனங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றில் பரஸ்பர ஒப்பந்தத்தை இரு நாடுகளும் எட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ள 90 நாட்கள் கெடுவுக்குள் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிநிலைக்கு எட்டுவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: 1000 டாலர் தர்றேன்.. தயவு செஞ்சு கிளம்புங்க..! சட்டவிரோத குடியேறிகள் வெளியேற அதிபர் ட்ரம்ப் சலுகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share