×
 

இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பலமான பதிலடியை இந்தியாவும் கொடுத்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் முதல் முறையாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவ அதிகாரிகளோடு தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.ஜி.எம்.ஓ.க்களுக்கு இடையே ஹாட்லைன் இணைப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையில் உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

அப்போது, இந்தியா தரப்பு அதிகாரிகளை நேரடியாக சந்தித்து பேச பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்தியா தாக்குதலை நிறுத்தினால் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தக்காக கூறப்படுகிறது. மேலும் ஊர் பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தான்..! சுக்கு நூறாக்கிய இந்தியா.. திக் திக் நிமிடங்கள்.. விக்ரம் மிஸ்ரி விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share