×
 

ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

ஓமன் கடற்கரை அருகே இந்திய கொடி ஏந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஓமன் நாட்டின் கடற்கரை அருகே இந்தியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்தத் தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்  இந்தியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை ஏற்க முடியாது என இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்த அனைத்து இந்திய மாலுமிகளையும் ஓமன் நாட்டு கடலோரக் காவல் படையினர் விரைந்து செயல்பட்டுப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.  

இதையும் படிங்க: போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

அபாயகரமான சூழலில் இந்திய ஊழியர்களைத் துரிதமாக மீட்ட ஓமன் நாட்டு அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சர்வதேசக் கடல் வழித்தடங்களில் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

இதையும் படிங்க: தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share