×
 

16 வருட கூகுள் அனுபவம்! ஆப்பிள் நிறுவனத்தின் AI பிரிவு தலைமைப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமண்யா!

ஆப்பிள் நிறுவனத்தின் AI பிரிவுக்கான துணை தலைவராக இருந்த ஜான் ஜியேந்திரா வெளியேறியதையடுத்து, புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமர் சுப்ரமண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவுத் துறையில், ஆப்பிள் நிறுவனம் ஒரு முக்கியமான தலைமை மாற்றத்தை அறிவித்துள்ளது. ஆப்பிளின் AI பிரிவு எனப்படும் ஏஐ துறையின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமண்யா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தப் பதவியில் இருக்கும் ஜான் கியானாண்ட்ரியா ஓய்வு பெற உள்ளதைத் தொடர்ந்து, இந்த உச்சகட்ட பொறுப்பு அமர் சுப்ரமண்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அசாதாரண நிபுணத்துவம் கொண்ட அமர் சுப்ரமண்யா, இதற்கு முன் உலகின் இரண்டு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களில் பணியாற்றிய அதிரடி அனுபவம் கொண்டவர். இவர் முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ துறையின் கார்ப்பரேட் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். அதற்கு முன்னர், அவர் கூகுள் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றியதுடன், அங்கு ஜெமினி AI-இன் துணைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

மென்பொருள் பொறியாளராக ஐபிஎம் நிறுவனத்தில் தனது தொழில் பயணத்தைத் தொடங்கிய அமர், 1997-2001ல் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். ஏஐ மற்றும் இயந்திரக் கற்றல் துறைகளில் ஆழமான அனுபவம் வாய்ந்த இவர், 2009 ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றார். கூகுள் நிறுவனத்தில் அவர் எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சி விஞ்ஞானியாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா யாருக்குச் சொந்தம்? சட்டவிரோதக் குடியேறிகள் உரிமைக் கோர முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) டிம் குக் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்களில் ஏஐ நீண்ட காலமாக முக்கிய கொள்கையாக இருந்து வருகிறது. அமர் சுப்ரமண்யாவை வரவேற்பதிலும், அவரது அசாதாரண ஏஐ நிபுணத்துவத்தை ஆப்பிள் நிறுவனத்துக்குக் கொண்டு வருவதிலும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார். 
மேலும், அமர் ஆப்பிள் நிறுவனத்தின் மாதிரிகள், இயந்திரக் கற்றல் ஆராய்ச்சி, ஏஐ பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்குத் தலைமை ஏற்று நடத்துவார் என்றும், அவரது நிபுணத்துவம், ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால 'ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களுக்கு' மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இதையும் படிங்க: பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share